தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மக்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்து அவர்களை சிரிக்க வைப்பதுதான் என்னை ஊக்குவிக்கிறது: நடிகர் வருண் சர்மா
"எனக்கு வெற்றி என்பது தினமும் காலையில் எழுந்து நான் விரும்புவதைச் செய்வதும் எப்போதும் நான் செய்ய விரும்புவதைச் செய்வதும் ஆகும்.", என்று ஃபுக்ரே தொடர் படங்கள் புகழ் நடிகரான வருண் ஷர்மா கூறினார். கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற "உங்களுக்கு என ஓர் இடத்தை எவ்வாறு உருவாக்குவது " என்ற தலைப்பில் நடந்த "உரையாடல்" அமர்வில் அவர் ஃபுக்ரே தொடர் படங்களின் இயக்குனர் மிருக்தீப் சிங் லம்பாவுடன் இணைந்து பார்வையாளர்களிடம் உரையாற்றினார்.
ஒரு நடிகராக வருண் ஷர்மா தனது வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், "நடிகர்கள் ஆரம்பத்தில் தங்களுக்கு என ஓர் இடத்தை உருவாக்குவது பற்றி யோசிப்பதில்லை - இது ஒரு நடிகரின் பயணத்தின் போது, பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அல்லது நீண்ட காலமாக செய்த நடிப்பு வாய்ப்பு தேர்வு (காஸ்டிங்) போன்ற பிற பணிகளில் கூட கற்றுக்கொள்வர்" என்று அவர் தனது கருத்தினைப் பதிவு செய்தார்.
மிருக்தீப் சிங் லம்பா தனது படங்களைப் பற்றிப் பேசுகையில், “நான் எனது படங்களின் வெற்றியை அளவுக்கு மீறி கொண்டாடுவதில்லை, நான் அதை ஒரு பந்தயமாகவும் எடுத்துக்கொள்வதில்லை - மாறாக எனது பயணத்தை வடிவமைத்த பல தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் போன்ற மற்றொரு கற்றல் அனுபவமாக மட்டுமே ஒரு படத்தின் வெற்றியையும் எடுத்துக்கொள்கிறேன்.” என்றார்.
இயக்குனர் மிருகதீப் லம்பா, ராம் கோபால் வர்மாவின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு திகில் படங்களில் முதன்முதலில் இறங்கியிருந்தாலும், பயணத்தின் ஏதோ ஒரு கட்டத்தில் கதை அவரது பாணிக்கு பொருத்தமானது என்ற நம்பிக்கையை அளித்ததாக குறிப்பிட்டார்.
ஃபுக்ரே தொடர் படங்களின் கதாபாத்திரங்கள் தில்லியின் சுற்றுப்புறங்களில் உள்ள சாதாரண மக்களிடமிருந்தே உருவாக்கப்பட்டன என்று வருணும் மிருக்தீப்பும் ஒப்புக்கொண்டனர்.
**************
SMB /SRI/ DL
(Release ID: 1878384)