தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பலோமா முதல் பசிஃபிக்ஷன் வரை: போர்த்துகீசிய திரைப்படத் தயாரிப்பின் நுணுக்கங்களைக் கொண்டாடுதல்
பாலோமா தனது காதலனுடன் ஒரு தேவாலயத்தில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்ளும் கற்பனையை ஒரு கோடை நாளில் உணர முடிவு செய்கிறாள். ஒரு பப்பாளி தோட்டத்தில் ஒரு பண்ணையாளாக கடினமாக உழைக்கிறாள் அந்தப்பெண். இந்த நீண்ட நேசத்துக்குரிய கனவுக்காக அவள் பணத்தைச் சேமித்து வருகிறாள். இருப்பினும், உள்ளூர் பாதிரியார் அவளது திருமணத்தை நடத்த மறுத்ததால், அவளுடைய கற்பனைக்கு ஒரு உண்மைச் சோதனை கிடைக்கிறது. இந்த திருநங்கை பெண் துஷ்பிரயோகம், துரோகம், மதவெறி மற்றும் அநீதியை அனுபவித்தாலும், அவளுடைய நம்பிக்கையும் உறுதியும் தளரவில்லை. போர்ச்சுகலில் இருந்து, பலோமா திரைப்பட விழாவுக்கு வந்து ஐசிஎப்டி- யுனெஸ்கோ காந்தி பதக்கம் பிரிவில் போட்டியிடுகிறது.
மார்கோ மார்ட்டின்ஸ் இயக்கிய கிரேட் யார்மவுத் (2022) மற்றும் ஆல்பர்ட் செர்ரா இயக்கிய பசிஃபிக்ஷன் (2022) ஆகிய போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற படங்களையும் இந்தத் திரைப்பட விழாவில் பிரதிநிதிகள் ரசிக்க முடியும்,.
போர்த்துகீசிய திரைப்படத் தயாரிப்பின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு பார்வையை திரைப்பட விழாவில் பெறுங்கள்.
**************
SRI/PKV/DL
(Release ID: 1878144)