தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நடிப்புதான் எனக்கு எல்லாமே, அதுதான் என் வாழ்க்கை: இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் உரையாடல் அமர்வில் நவாசுதீன் சித்திக்
பாலிவுட் திரைப்படங்களான பிளாக் ஃப்ரைடே, நியூயார்க், பீப்லி லைவ், கஹானி, கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸேபூர் போன்ற படங்களில் தோன்றிய நடிகர் நவாசுதீன் சித்திக் , இன்று ‘நடிகராக பயணம்’ என்ற தலைப்பில் ‘உரையாடல்’ அமர்வில் உரையாற்றினார். கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக இந்த அமர்வக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
"நீங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்றால், நீங்கள் கற்றுக்கொள்ளாததை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று நவாசுதீன் சித்திக் கூறினார். நடிகராக தனது பயணத்தைப் பற்றிப் பேசிய அவர், உள்ளூர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, சிறிது காலம் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேதியியலாளராகப் பணியாற்றினார். இருப்பினும், நடிகராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற, அவர் நாடகத்தில் நடித்தார்.
அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் அவர் சந்தித்த போராட்டங்கள் மற்றும் சவால்களைப் பற்றி கேட்டபோது, நவாசுதீன் தனக்கு முதலில் சிறிய பாத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார். "இக்கட்டான நேரமே உங்களை வலிமையாக்குகிறது," என்று அவர் கூறினார்.
நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிற ஓடிடி தளங்களில் வெப்-தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தையும் நவாசுதீன் சித்திக் பகிர்ந்து கொண்டார்.
தினமும் வேலை செய்வதற்கான உந்துதலையும் ஊக்கத்தையும் எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, நடிப்பது எனது பொழுதுபோக்கு என்றும், அதில் நான் சோர்வடைவதில்லை என்றும் நவாசுதீன் கூறினார். “நடிப்புதான் என் எல்லாமே, அதுதான் என் வாழ்க்கை. எனது நடிப்பு தாகத்தை தீர்க்க ஒரு ஆயுள் போதாது” என்று அவர் மேலும் கூறினார்.
வரவிருக்கும் தனது ஹடி திரைப்படம் பற்றியும், அதில் திருநங்கையாக நடித்ததது பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.
**************
SRI/ PKV/ DL
(Release ID: 1878135)