தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பெண்கள் அதிகாரம் பெற்ற சமூகத்தில் உண்மையில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ‘நானு குசுமா’ திரைப்படம் கேட்கும் கேள்வி
பெண்கள் அதிகாரம் பெற்ற சமூகம் என்று நாம் கூறும் நாம் வர்ணிக்கும்போது, பெண்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? இது உண்மையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா? மகாத்மா காந்தியின் கனவான பாதுகாப்பை உள்ளடக்கிய ராமராஜ்ஜியத்தை நாம் அடைந்துவிட்டோமா? கன்னட திரைப்படமான ‘நானு குசுமா’ (நான் குசுமா) முன்வைத்த சிந்தனையைத் தூண்டும் சில கேள்விகள் இவை.
கோவாவில் நடைபெற்று வரும் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ எனும் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய இயக்குனர் கிருஷ்ணகவுடா , கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் நமது ஆணாதிக்க சமூகத்தின் யதார்த்தத்தை ‘நானு குசுமா’ பிரதிபலிக்கிறது, என்று கூறினார்.
இந்தப் படம் கன்னட எழுத்தாளர் டாக்டர் பெசகரஹள்ளி ராமண்ணா எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது, அவர் ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்திலிருந்து குறிப்புகளை எடுத்து புத்தகத்தை எழுதியுள்ளார். “பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகியவை இந்த படத்தின் மையமாக உள்ளது. சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை எடுத்து சொல்லும் திரைப்படங்களை உருவாக்குவதே எனது விருப்பம்”, என்று இயக்குனர் கூறினார்.
குசுமா பாத்திரத்தை சித்தரிப்பது எவ்வளவு கடினமானது என்பதை பகிர்ந்து கொண்ட நடிகை கிரீஷ்மா ஸ்ரீதர், அந்த மனநிலையில் தொடர்ந்து இருந்தது பெரும் சவாலாக இருந்ததோடு சோர்வை ஏற்படுத்தியதாக கூறினார். “இந்த குறிப்பிட்ட கருப்பொருளை திரைப்படமாக்க தேவையான எடுத்துக்காட்டுகளுக்கு நம்மை சுற்றி பற்றாக்குறை இல்லை என்று சொல்வது இதயத்தை உடைக்கிறது”, என்று அவர் கூறினார்.
இந்தியன் பனோரமா ஃபீச்சர் பிலிம்ஸ் பிரிவின் கீழ் இப்படம் திரையிடப்பட்டது. இது மற்ற 8 படங்களுடன் சர்வதேச திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஒலி-ஒளி தொடர்பு மன்றம் (ICFT) - யுனெஸ்கோ காந்தி பதக்கப் பிரிவில் போட்டியிடுகிறது. இது யுனெஸ்கோவின் கொள்கைகளை பிரதிபலிக்கும் சர்வதேச மற்றும் இந்திய புனைகதை திரைப்படங்களுக்காக அளிக்கப்படும் விருது
திரைப்படம் பற்றி
இயக்குனர்: கிருஷ்ணகவுடா
தயாரிப்பாளர்: கிருஷ்ணகவுடா
திரைக்கதை: கிருஷ்ணகவுடா எல்தாஸ், டாக்டர் பெசாகரஹள்ளி ராமண்ணனவரு
ஒளிப்பதிவாளர்: அர்ஜுன் ராஜா
படத்தொகுப்பாளர்: சிவகுமார் சுவாமி
நடிகர்கள்: கிரீஷ்மா ஸ்ரீதர், சனாதானி, கிருஷ்ணகவுடா, காவேரி ஸ்ரீதர், சௌமியா பகவத், விஜய்
கதை சுருக்கம்: குசுமா ஒரு மருத்துவமனையில் சவக்கலை செய்பவரின் மகள். அவளது தந்தை இவள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். குசுமாவை டாக்டராக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஆனால் அவர் விபத்தில் சிக்கி இறந்துவிடுகிறார். அவரது உடல் அதே சவக்கிடங்கில் அதே நடைமுறைக்கு உட்படுத்தப்படும். குசுமா நிதி நெருக்கடியால் மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டு செவிலியராக முடிவு செய்கிறார். கருணை அடிப்படையில் அவள் தந்தையின் அரசாங்க வேலையைப் பெறுகிறாள். ஆனால் குசுமா பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானபோது அவரது வாழ்க்கை ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது.
**************
PKV/SRI/DL
(Release ID: 1878131)
Visitor Counter : 1159