தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சில நேரங்களில் விலங்குகள் மனிதர்களைப் போலவும், மனிதர்கள் விலங்குகளைப் போலவும் நடந்து கொள்கிறார்கள்: இயக்குனர் ரோட்ரிகோ குரேரோ
ஒரு நபர் தனது வீட்டு நாய்கள் தொடர்பாக தனது அபார்ட்மெண்டின் அண்டை வீட்டாருடன் பிரச்சனையில் சிக்கியதைப் பற்றி செய்தித்தாளில் வந்த கட்டுரைதான் இயக்குனர் ரோட்ரிகோ குரேரோவை "சைட் பெரோஸ் (ஏழு நாய்கள்)" திரைப்படத்தை உருவாக்கத் தூண்டியது.
கோவாவில் நடைபெற்று வரும் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ எனும் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய இயக்குனர் ரோட்ரிகோ “சில நேரங்களில் விலங்குகள் மனிதர்களைப் போலவும், மனிதர்கள் விலங்குகளைப் போலவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்
சமகால நகர்ப்புற சூழலில் தனிமை மற்றும் நட்புறவு பிரச்சினைகள், அவர் ஆராய விரும்பிய கருப்பொருள்கள் என்று அவர் குறிப்பிட்டார். விலங்குகளை வைத்து திரைப்படமெடுப்பதில் உள்ள சவால்கள் குறித்து கேட்கப்பட்டபோது, செல்லப்பிராணிகள் கட்டுப்பாடான அமைப்பில் இருக்கும் வரை அவற்றை வைத்து திரைப்படம் உருவாக்குவது எளிதானது என்று இயக்குனர் குறிப்பிட்டார்.
கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 2021 ஆம் ஆண்டில் ரோட்ரிகோ குரேரோ இயக்கிய திரைப்படமான "சைட் பெரோஸ் (ஏழு நாய்கள்)" சர்வதேச போட்டிப் பிரிவின் கீழ் விரும்பப்படும் தங்க மயில் (கவடட் கோல்டன் பீகாக்) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரும்பப்படும் தங்க மயில் விருதுக்கு 15 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
திரைப்பட குழு
இயக்குனர்: ரோட்ரிகோ குரேரோ
தயாரிப்பாளர்: ரோட்ரிகோ குரேரோ
திரைக்கதை: பவுலா லூஸ்ஸி
ஒளிப்பதிவாளர்: குஸ்டாவோ தேஜெடா
படத்தொகுப்பாளர்: டெல்ஃபினா காஸ்டாக்னினோ, சுவானா லியுண்டா
நடிகர்கள்: லூயிஸ் மச்சின், மாக்சிமிலியானோ பினி, நடாலியா டி சியென்சோ, பவுலா லூஸ்ஸி, இவா பியான்கோ, பவுலா ஹெர்ட்ஸாக்
கதை சுருக்கம்:
அர்ஜென்டினாவின் கோர்டோபா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் எர்னஸ்டோ தனது ஏழு நாய்களுடன் வசித்து வருகிறார். அவருடைய தனிமையான தினசரி வாழ்க்கை என்பது அவரது செல்லப்பிராணிகளின் தேவைகள், அவருடைய உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் அவருடைய பணப் பிரச்சனைகளைச் சுற்றியே இருக்கிறது. அவர் அண்டை வீட்டார்கள் அனைவரும் இணைந்து ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, அவரது செல்லப்பிராணிகளை குடியிருப்பில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும்படி அவரை வலியுறுத்துகின்றனர். எர்னஸ்டோ தனது நாய்கள் இல்லாமல் வாழ விரும்பவில்லை, அதேசமயம் அவரால் வேறு இடத்திற்கு செல்லவும் முடியாது.
**************
PKV/SRI/DL
(Release ID: 1878125)
Visitor Counter : 192