தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'பியூட்டிபுல் பீயிங்ஸ்' - நட்பின் மகிழ்ச்சிகள் மற்றும் எல்லைகள் பற்றிய கதை
'பியூட்டிபுல் பீயிங்ஸ்' திரைப்படம் இன்றைய இளைஞர்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை சித்தரிக்கும் முயற்சியாகும். நட்பின் மகிழ்ச்சிகளையும் எல்லைகளையும் நுட்பமான முறையில் ஆராயும் கதை இது. இந்த ஐஸ்லாண்டிக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அன்டன் மேனி ஸ்வான்சன், திரைப்பட விழாவுக்கு இடையே, பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்’ அமர்வில் ஊடகங்கள் மற்றும் விழாப் பிரதிநிதிகளுடன் உரையாடும் போது இதனைத் தெரிவித்தார்.
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் காட்சியாக திரையிடப்பட்ட பியூட்டிஃபுல் பீயிங்ஸ் ‘சினிமா ஆஃப் தி வேர்ல்ட்’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
நிஜச் சூழல்கள் மற்றும் கதைகளை அடிப்படையாகக் கொண்ட எங்களின் படத்தின் மூலம், முடிவைப் பற்றி எப்போதும் சிந்திக்காமல், மற்றவர்களுக்குப் பங்களிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தர முயல்கிறோம் என்றார் ஆண்டன். "எனது இயக்குனர் அர்னார் குமுண்ட்சன் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் வன்முறையும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கும் ஒரு நுட்பமான திரைப்படத்தை உருவாக்க இந்த யோசனையை கொண்டு வந்தார்," என்று அவர் மேலும் கூறினார்.
"எந்தவொரு உறவிலும் ஒருவருக்கொருவர் எல்லைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், அதனை எப்படி மதிக்க வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது." என அவர் தெரிவித்தார்.
படத்துக்கு குழந்தை நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருந்த சவால்களே அவரது பெரிய பிரச்சினையாக இருந்தது என்று விவரித்தார். "ஐஸ்லாந்தில், எங்களிடம் அதிக குழந்தை நடிகர்கள் இல்லை, எனவே நாங்கள் திறந்த நடிப்புத் தேர்வு (ஆடிஷன்) வைத்து தேர்ந்தெடுத்தோம். இது ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தது, ”என்று அவர் கூறினார், தேர்வு செயல்முறை முடிந்ததும், குழந்தைகள் பல மாதங்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். "நாங்கள் அவர்களுக்கு நடிப்பு, நெருக்கம், சண்டை போன்றவற்றில் பயிற்சி அளித்தோம். ஒரு நாளைக்கு 10 மணிநேரம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததால், அனைத்து வேலை அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ள தேவையான சகிப்புத்தன்மையை உறுதிப்படுத்த முயற்சித்தோம். விளையாட்டுக் குழுவை எப்படி வளர்ப்போமோ அப்படித்தான் அவர்களை வளர்த்தோம் என அவர் விளக்கினார்.
தங்களது கனவுத் திட்டத்தைக் காட்சிப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு ஐஎப்எப்ஐ-க்கு நன்றி தெரிவித்த ஆன்டன், சினிமா ஆர்வலர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும் அவர்களின் எதிர்வினைகளை அளவிடுவதற்கும் இந்த விழா தனக்கு ஒரு தளத்தை வழங்கியதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் - 2022 இல் 'பியூட்டிஃபுல் பீயிங்ஸ்' திரையிடப்பட்டது
படம் பற்றி:
இயக்கம் மற்றும் திரைக்கதை: குமுண்டூர் அர்னார் குமுண்ட்சன்
தயாரிப்பாளர்: ஆன்டன் மணி ஸ்வான்சன்
நடிகர்கள்:
பிர்கிர் டகுர் பிஜார்கசன், அஸ்கெல் ஐனார் பால்மேசன், விக்டர் பெனோனி பெனெடிக்ட்சன், அனிடா பிரியம், ஆஸ்கெரூர் குன்னர்ஸ்டோட்டிர், ஆலாஃபுர் டார்ரி ஆலாஃப்சன்
கதைச்சுருக்கம்:
ஆடி, ஒரு தெளிவான தாயால் வளர்க்கப்பட்ட சிறுவன், வெளி உலகில் தவறான கும்பலால் வழிநடத்தப்படுகிறான். சிறுவர்கள் ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறையை கையாண்டாலும்,விசுவாசம் மற்றும் அன்பைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் நடத்தை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை நோக்கி நகரும்போது, ஆடி தொடர்ச்சியான கனவு போன்ற காட்சிகளை அனுபவிக்கத் தொடங்குகிறார். அவனுடைய புதிய உள்ளுணர்வு அவனையும் அவனது நண்பர்களையும் பாதுகாப்பான பாதைக்கு மீண்டும் வழிநடத்துமா அல்லது அவர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடுவார்களா?
இயக்குனரின் விவரம்;
குட்முண்டூர் அர்னார் நுண்கலையில் பட்டம் பெற்றவர். இவரது படங்கள் பல விழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டு விருதுகள் பெற்றுள்ளன. இந்த பாராட்டுக்களில் கேன்ஸ் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழா மற்றும் ஐரோப்பிய திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரை ஆகியவை அடங்கும். அவரது முதல் படமான 'ஹார்ட்ஸ்டோன்' வெனிஸில் திரையிடப்பட்டது. உலகளவில் 50 விருதுகளை வென்றது.
**************
SRI/PKV/DL
(Release ID: 1878122)
Visitor Counter : 171