தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மை லவ் அபையர் வித் மேரேஜ் திரைப்படம் காதல் பற்றிய அகநிலைக் கேள்விகளுக்கு அறிவியலை ஒரு புறநிலை கருவியாகக் கொண்டு பதிலளிக்கும் முயற்சியாகும்: இயக்குனர் சிக்னே பாவ்மனே
மை லவ் அபையர் வித் மேரேஜ் திரைப்படம் காதல் பற்றிய அகநிலைக் கேள்விகளுக்கு அறிவியலை ஒரு புறநிலை கருவியாகக் கொண்டு பதிலளிக்கும் முயற்சியாகும்: இயக்குனர் சிக்னே பாவ்மனே
இயக்குநர் சிக்னே பாவ்மனேயின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் மை லவ் அபையர் வித் மேரேஜ். அவரது இரண்டாவது திருமணத்தின் தோல்வி, பெண்கள் மீதான சித்தரிப்புகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் கதாநாயகி ஜெல்மாவின் பாத்திரப்படைப்பு ஆகியவை படத்தின் சிறப்பு அம்சங்கள்.
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த 'டேபிள் டாக்' நிகழ்ச்சியில் ஊடகங்கள் மற்றும் திரைப்படப் பிரதிநிதிகளிடம் உரையாற்றிய திருமதி. சிக்னே பாவ்மனே, பெண்கள் எப்படி சாப்பிடுவது, உடுத்துவது, உட்காருவது, நடந்து கொள்வது, எப்படி/யாரை திருமணம் செய்வது போன்ற விதிமுறைகளுடன் எப்படி வளர்கிறார்கள் என்பதைப் பற்றி பேசினார். படத்தின் நாயகி ஜெல்மாவின் தாய் தன் கணவனை விட தன் குழந்தைகளை அதிகம் நேசிக்கும்படி அவளுக்கு அறிவுரை கூறும் காட்சி அற்புதமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் பெண்ணியம் என்று முத்திரை குத்தப்படுவதை விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, "பெமினிஸ்ட்" என்ற வார்த்தை பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவத்தைப் பற்றியது என்பதைச் சுட்டிக் காட்டினார். பெண்களின் பாத்திரங்கள் பற்றிய சமூகத்தின் கருத்துகளால் அவர்கள் தடைகளை எதிர்கொள்கிறார்கள்.அத்தகைய கருத்துகளின் காரணமாக, தனிப்பட்ட அவரது கதை அரசியல் அல்லது பெண்ணியச் செயலாக பலருக்குத் தோன்றக்கூடும் என்று அவர் கூறினார்.
1600 பங்களிப்பாளர்களால் பல்வேறு வழிகளில் சாத்தியமாக்கப்பட்ட திரைப்படத்தின் 7 ஆண்டு பயணத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்டர்கிஸ் வார்னர் பேசினார். இந்திய சினிமா அரங்கிலும் திரைப்படங்களிலும், முன்னாள் சோவியத் யூனியனில் வளரும்போது, ஆரோக்கியமான பொழுதுபோக்கை அளிக்கும் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்ததை திருமதி சிக்னே நினைவுகூர்ந்தார்.
திருமதி சிக்னே தனது திரைப்படம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி விளக்கினார்.
ஐஎப்எப்ஐ-யில் நேற்று திரையிடப்பட்ட இத்திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
படத்தின் பெயர்: மை லவ் அஃபேர் வித் மேரேஜ்
இயக்கம் மற்றும் திரைக்கதை: சிக்னே பாவ்மனே
தயாரிப்பாளர்கள்: ராபர்ட்ஸ் வினோவ்ஸ்கிஸ், ஸ்டர்கிஸ் வார்னர், சிக்னே பாவ்மனே, ரவுல் நடலெட்
தொகுப்பாளர்கள்: சிக்னே பாவ்மனே, ஸ்டர்கிஸ் வார்னர்.
நடிகர்கள்: ஜெல்மா: டக்மாரா டொமின்சிக்,
கதைச்சுருக்கம்:
சிறுவயதிலிருந்தே, பாடல்களும் விசித்திரக் கதைகளும் ஜெல்மாவை நம்பவைத்தது, ஒரு பெண் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்புகளுக்குக் கட்டுப்படும் வரை காதல் அவளுடைய எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். ஆனால் அவள் வளர வளர, காதல் என்ற கருத்து சரியாகத் தெரியவில்லை. அவள் எந்தளவுக்கு இணங்க முயன்றாளோ அந்த அளவுக்கு அதிகமாக அவள் உடல் எதிர்த்தது. பெண் கிளர்ச்சியை ஏற்றுக்கொள்வது பற்றிய கதை.
**************
PKV/KRS
(Release ID: 1878102)