தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புதுமுகத் திரைப்பட பிரிவில் ‘தி ஐ லேண்ட் ஆப் லாஸ்ட் கேர்ள்ஸ்’ திரையிடப்பட்டது

Posted On: 22 NOV 2022 5:28PM by PIB Chennai

குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிய காரியமல்ல. பெற்றோரிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் மணிக்கணக்கில் தங்களது அனுபவங்களை பகிருவார்கள். ஆறு சுட்டிக்குழந்தைகளின் பெற்றோர் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்குவது என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அதிலும், மூன்று குழந்தைகளை ‘தி ஐ லேண்ட் ஆப் லாஸ்ட் கேர்ள்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். கரோனாடோவில் இருந்து வந்துள்ள ஸ்கிமிட் குடும்பத்தினர் 53ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு தங்களது ‘குடும்ப’ திரைப்படத்தை  திரையிட உள்ளனர்.

அந்த திரைப்படத்தின் இயக்குநரான அன்னா மேரி ஸ்கிமிட் பேசும் போது,“குழந்தைகளோடு இணைந்து படம் எடுப்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. அதிலும், எங்களுடைய குழந்தைகளை வைத்து திரைப்படம் எடுப்பது கூடுதலான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் தந்தது. அதே வேளையில் அதற்கு நிறைய கடின உழைப்பு தேவைப்பட்டது.” எங்களுடைய குழந்தைகளின் திறமைகளை ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் பயன்படுத்தி வெளி உலகிற்கு வழங்கியுள்ளோம் என்றார்.

“இந்த திரைப்படம் உருவாகுவதில் எங்களுடைய மகள்களின் பங்கு மகத்தானது. இந்த திரைப்படத்திற்காக போடப்பட்ட அரங்கு தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதாவது சரியான இடத்தில் அந்த அரங்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் இயற்கையான வெளிச்சத்தில் திரைப்படத்தை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. சில நேரங்களில், போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை. அதனை படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்பு பணிகளின் போது சரி செய்தோம். இயற்கையாக அமைந்துள்ள படப்பிடிப்பு தளத்தில் படமாக்கும் போது, எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. குறிப்பாக, கடல் நீரில் படமாக்கும் போது, நண்டுகள் குழந்தைகளை கடித்தது” என்றார்

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், குழந்தைகளின் தகப்பனாருமான பிரையன் ஸ்கிமிட் பேசும் போது, கொவிட் பெருந்தொற்றுக்கு முன்பாகவே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் கொடிய தாக்கங்கள்  முடிந்த பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருந்தோம். உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பல்வேறு வகையான பார்வையாளர்கள் மத்தியில்  திரைப்படத்தை வெளியிடுவது  சிறந்த அனுபவமாகும். மூன்று மகள்களின் விளையாட்டு தனமான சண்டை, சச்சரவுகள் மற்றும் குறும்புத் தனங்களை மிக அழகாக படம் பிடித்துள்ளோம்.

இந்த திரைப்படத்தில் நடித்த அவிலா, அட்டோம், ஸ்கார்லட் ஆகிய 3 சிறுமிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த திரைப்படம் ஏற்கனவே மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவிலும், சினிமேஜிக் திரைப்பட விழாவிலும் பேன்டாசியா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதைக்களம்

மூன்று சிறுமிகளும் ராட்சத அலைகளில் சிக்கி அதன் பின்னர் கடல் குகையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெரிய நீர் நாய்கள், பெரிய கடல் பசுக்களுக்கும் மூன்று சிறுமிகளுக்கும்  இடையே நடைபெறும் போராட்டத்தின் பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. பாஜா மெக்சிகோ கடல் குகைகளில் வைத்து படமாக்கப்பட்டது மிகப்பெரிய திகில் அனுபவத்தை கொடுக்கும். 

------------------

(Release ID: 1878036)

GS/RS/KRS



(Release ID: 1878095) Visitor Counter : 134


Read this release in: Hindi , Urdu , English , Marathi