தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘நாளைய 75 இளம் படைப்பாளர்களுக்கான’ ’53 மணி நேர சவாலைத்’ தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர்
53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவை முன்னிட்டு, 'நாளைய 75 இளம் படைப்பாளர்களுக்கான’ '53 மணி நேர சவால்’, 'ஃபிலிம் பஜார்’, 'இந்திய பனோரமா பிரிவு’ போன்ற பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று தொடங்கி வைத்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், செயலாளர் திரு அபூர்வ சந்திரா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
திரைப்படப் தயாரிப்புடன் தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்ப உபகரணங்களை விளக்கும் திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை, ஏராளமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் மூலம் விளக்கும் ‘சுதந்திரப் போராட்டமும், திரைப்படமும்' முதலிய கண்காட்சிகளையும் அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
ஷார்ட்ஸ் தொலைக்காட்சியுடன் இணைந்து தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் நடத்தும் ‘நாளைய 75 இளம் படைப்பாளர்கள்' போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 75 இளைஞர்கள் ‘இந்தியா@100’ என்ற தலைப்பில் 53 மணி நேரத்தில் குறும்படங்களைத் தயாரிக்க வேண்டும். திரைப்பட தொழில்நுட்ப கண்காட்சியை புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமும், விடுதலைப் போராட்டம் பற்றிய கண்காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகமும் ஏற்பாடு செய்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1877804
**************
(Release ID: 1877804)
Sri/RB/KRS
(Release ID: 1878024)
Visitor Counter : 161