தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

திரைப்படம் எடுப்பது கால்பந்து விளையாட்டு போன்றது, ஒவ்வொரு குழு உறுப்பினரும் முக்கியம்: இந்தியாவின் 53 வது சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ்டர் வகுப்பு

திரைப்பட உருவாக்கம் என்பது ஓவியம் அல்லது டென்னிஸ் விளையாட்டு போன்றது அல்ல, அங்கு தனிப்பட்ட பங்களிப்பு அல்லது கடின உழைப்பு வெற்றியைத் தீர்மானிக்கும். திரைப்பட உருவாக்கம் கால்பந்து அல்லது கிரிக்கெட் விளையாட்டு போன்றது, இதில் ஒவ்வொரு குழு உறுப்பினரின் பங்களிப்பும் முக்கியமானது. கோவாவின் பனாஜியில் நடைபெற்று வரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை ஒட்டி இன்று நடத்தப்பட்ட மாஸ்டர் வகுப்பு என்று சிறப்பு கருத்தரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து இது.

தேசிய திரைப்பட விருது பெற்ற இயக்குனர் ஷூஜித் சிர்கார் மற்றும் இயக்குனர்/திரைக்கதை எழுத்தாளர் அத்வைத் சந்தன் ஆகியோர் திரைப்படம் ஒரு குழுப்பணிஎன்ற தலைப்பில் நடைபெற்ற மாஸ்டர் வகுப்பில் கலந்து கொண்டனர்.

விக்கி டோனர், பிங்க், சர்தார் உதம் போன்ற பல பாராட்டப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர் ஷூஜித் சிர்கார் அமர்வைத் தொடங்கிவைத்து பேசுகையில், தனது நடிகர்கள் மற்றும் குழுவினரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் நிபுணத்துவத்தை விட தன்னைப் புரிந்துகொள்ளும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார்.

குழுப்பணி குறித்த இந்த கருத்தை வலுப்படுத்தும் வகையில், நடிகர்கள் மற்றும் குழுவினரைத் தேர்ந்தெடுக்கும் போது அறையில் மிகவும் முட்டாள்தனமான நபராக தான் இருக்க விரும்புவதாக லால் சிங் சத்தா மற்றும் சீக்ரெட் சூப்பர்ஸ்டார் திரைப்பட இயக்குனருமான அத்வைத் சந்தன் கூறினார்.

திரைப்படத் தயாரிப்பின்போது இயக்குனர்-நடிகர் இடையேயான தொடர்புகளை ஆழமாக ஆராய்ந்த ஷூஜித் சிர்கார், ஒரு நடிகருடன் பழகும்போது மிக முக்கியமான விஷயம் அந்த நடிகர்/நடிகையின் பகுத்தறியும் திறன் என்று கூறினார்.

நடிகர்களுடன் பணிபுரிவது குறித்த தனது கருத்தை கூறுகையில் அத்வைத் ஐந்து விரல்களும் ஒன்றல்ல’ – அதாவது ஒருவருக்கு பொருந்துவது இன்னொருவருக்கு பொருந்தாது என்று கூறினார். நடிகர்கள் மற்றும் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரையும் இயக்குனர் உண்மையாக நேசித்தால், அவர்களின் தவறுகளை சரிசெய்து முன்னேற முடியும் என்று அவர் கூறினார்.

திரைப்படங்களின் சோதனைத் திரையிடல் குறித்த விவாதத்தில் இரு இயக்குநர்களும் மாறுபட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அத்வைத் திரைப்படங்களைப் பற்றி பார்வையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது நல்லது என்று கூறியபோது, ஷூஜித் இந்த யோசனைக்கு தான் முற்றிலும் எதிரானவர் என்று தெரிவித்தார். என்னுடைய படத்தில் பார்வையாளர்கள் கடைசியாக இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, என்னுடைய கதையின் பார்வை முக்கியமானது. நான் என்ன செய்தேன் அல்லது செய்ய முயற்சித்தேன், என்பதற்கு என்னை விட சிறந்த நீதிபதி யாரும் இருக்கமுடியாது," என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறுகையில், தனது ஒரே பயம் தனது படங்களை தவறான பார்வையாளர்கள் பார்ப்பது மட்டுமே.

திரைப்பட பத்திரிக்கையாளர் ஹிமேஷ் மங்காட் இந்த அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

******

iffi reel

(Release ID: 1877975) Visitor Counter : 190


Read this release in: English , Urdu , Marathi , Hindi