தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நம் காலத்தின் நகர்ப்புற சமூகத்தில் இளம்பருவத்தினர் எதிர்கொள்ளும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளை ‘ஹதினெலெண்டு’ சித்தரிக்கிறது: இயக்குனர் பிருத்வி கோனானூர்
‘ஹடினெலெண்டு’ திரைப்படம் இரண்டு இளம்பருவ மாணவர்களின் பொறுப்பற்ற செயலின் காரணமாக அவர்களின் வாழ்க்கை ஒரு கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்படுவதை காண்பிக்கிறது.
கோவாவில் நடைபெற்று வரும் 53வது சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்திருந்த ‘டேபிள் டாக்ஸ்’ எனும் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் பிருத்வி கோனனூர், பிரச்னைக்கு பின் பிரச்சனைகள் வர இரண்டு மாணவர்களின் வாழ்க்கை எப்படி கோரமாக மாறுகிறது என்பதும், அதில் இருந்து அவர்கள் தப்ப முடியாமல் எப்படி அல்லாடுகிறார்கள் என்பதுதான் இத்திரைப்படம் என்று கூறினார்.
இக்கன்னடத் திரைப்படம் 53வது சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்கப் படமாக திரையிடப்பட்டது.
பிருத்வி கோனானூரின் கூற்றுப்படி, இத்திரைப்படம் ஆணாதிக்கம், சாதிப் பாகுபாடு, பொருளாதாரப் பிளவு, சமூகக் கடமைகள் மற்றும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கையாள்கின்றது. "சாதாரண மக்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் சிக்கும்போது எதையெல்லாம் சகிக்க வேண்டும் என்பதை இத்திரைப்படம் ஆராய்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
படத்தின் முடிவைப் பற்றி பேசும்போது, அது எந்த ஒரு பக்கத்தையும் ஆதரிக்கவோ அல்லது தீர்ப்பை வழங்கவோ இல்லை, "பார்வையாளர்களின் கற்பனைக்காக அதை நாங்கள் அதை விட்டுவிட்டோம்" என்றார்.
திரைப்படம் பற்றி:
இயக்குனர்: பிருத்வி கோணனூர்
தயாரிப்பு: கோணனூர் புரொடக்ஷன்ஸ்
திரைக்கதை: பிருத்வி கோணனூர், அனுபமா ஹெக்டே
ஒளிப்பதிவாளர்: அர்ஜுன் ராஜா
ஆசிரியர்: சிவகுமார சுவாமி
நடிகர்கள்: ஷெர்லின் போசலே, நீரஜ் மேத்யூ, ரேகா குட்லிகி, பவானி பிரகாஷ், ரவி ஹெப்பால்லி
கதை சுருக்கம்:
12ஆம் வகுப்பு மாணவிகள் தீபாவும் ஹரியும், சனிக்கிழமை மதியம் கல்லூரி நேரம் முடிந்ததும் வகுப்பறையில் தங்களின் அந்தரங்க தருணங்களை தீபாவின் தொலைபேசியில் பதிவு செய்தனர். திங்கட்கிழமை அவர்கள் தலைமை ஆசிரியரால் வரவழைக்கப்பட்டு, அவர்களின் வீடியோ இப்போது இணையத்தில் உள்ளது எனும் அதிர்ச்சி தகவலை கூறுகிறார். அவர்களது குடும்பங்கள் சிதைகின்றன. அவர்கள் நிலைகுலைந்த நிலையில் அவர்களின் தலைவிதியை கல்லூரி நிர்வாகம் தீர்மானிக்கிறது. ஆனால் அவர்களின் சாதி பற்றிய கேள்விகள் எழும்போது விஷயங்கள் கட்டுப்பாட்டை மீறத் தொடங்குகின்றன.
**************
(Release ID: 1877967)