மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயிரோட்டம் பெறும் காசி தமிழ் சங்கமம், உள்ளூர் கலாச்சாரத்தில் மூழ்கி எழுந்தது
प्रविष्टि तिथि:
21 NOV 2022 5:13PM by PIB Chennai
காசி சங்கமத்தின் 3-வது நாளான திங்கட்கிழமை புனித கங்கையாற்றின் நதிக்கரையில் உள்ள காசியின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கூடினார்கள். ஹர ஹர மகாதேவ் என்ற கோஷத்தோடு புனித நீராடிய பின் அவர்கள், ஸ்ரீ காசி விஸ்வநாதா கோவிலுக்குச் சென்றனர். அத்துடன் பனாரசி உணவு வகைகளை உண்டும் பல்வேறு கைத்தறிப் பொருட்களை வாங்கியும் மகிழ்ந்தார்.
வாரணாசி ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்து இறங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.
முதன் முறையாக தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வந்திருந்த மாணவர்கள் காசி சங்கமத்தில் உற்சாகத்துடன் பங்கேற்ப்பதை காணமுடிந்தது. காசி சங்கமம் மூலம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியை அவர்கள் பாராட்டினார்கள்.
***************
(रिलीज़ आईडी: 1877818)
आगंतुक पटल : 169