தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பானிஷ் இயக்குநர் கார்லோஸ் சவுராவுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது

Posted On: 19 NOV 2022 7:03PM by PIB Chennai

53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர்  20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திரைப்பட விழா  மிகப்பெரும் திரைப்பட ஜாம்பவான்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்து கலை, திரைப்படங்கள் மற்றும் பாரம்பரியத்தின் கூட்டுக்கலவையாக பிரதிபலிக்கிறது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில்,  183 படங்கள் திரையிடப்படவுள்ள நிலையில், இந்திய திரைப்பட பிரிவில், 25 கதையுடன் கூடிய படங்களும், 20 கதை அல்லாத திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன.

டியட்டர் பெர்னர் இயக்கிய ஆஸ்திரிய திரைப்படமான அல்மா அண்ட் ஆஸ்கர், வருடாந்திர திரைப்பட விழாவின் முதல் படமாக திரையிடப்படுகிறது. கிர்ஸிஸ்டோப் ஸானுசியின் ‘பெர்பெக்ட் நம்பர்’ கடைசி திரைப்படமாக காண்பிக்கப்படும்.

பனாஜியில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில், மிருனாள் தாக்கூர், வருண் தவான், காத்தரின் தெரசா, சாரா அலி கான், கார்த்திக் ஆர்யன், அம்ரிதா கன்வில்கர் ஆகிய திரைப்பட ஆளுமைகள் கலந்து கொள்கின்றனர். கோவா மாநில ஆளுநர் பி.எஸ்.ஶ்ரீதரன், முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்பானிஷ் திரைப்பட இயக்குனர் கார்லோஸ் சவ்ராவுக்கு வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் சிறப்பு கவனம் செலுத்தப்படும் நாடாக கருதப்பட்டு அந்நாட்டின் 8 திரைப்படங்கள் திரையிடப்படும்.

இந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு புதிய முன்முயற்சிகள் மற்றும் திரைப்பட சந்தையை கொண்டுள்ளது.

கோவா முழுவதும் கேரவன் வண்டிகள் மூலம் திரைப்படங்கள் திரையிடப்படும்

கடற்கரை திறந்தவெளியிலும் படங்கள் திரையிடப்படும்

“டிஜிட்டல் முறையில் மீட்டுறுவாக்கம் செய்யப்பட்ட இந்திய படங்கள்” பிரிவில், இந்திய தேசிய திரைப்பட களஞ்சியத்தில் இருந்து படங்கள் காண்பிக்கப்படும்.

இந்த ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஆஷாபரேக்கின் மலரும் நினைவாக - தீஸ்ரி மன்ஸில், தோ பதான், கட்டி பதங் ஆகிய 3 படங்கள் திரையிடப்படும்.

அஞ்சலி பிரிவில் 15 இந்தியப் படங்களும், 5 சர்வதேசப் படங்களும் இடம்பெறும். பாரத ரத்னா லதா மங்கேஷ்கர், இசையமைப்பாளர், பாடகர் பப்பி லஹரி, கதக் மேதை பண்டிட் பிர்ஜூ  மகராஜ், நடிகர்கள் ரமேஷ் தியோ, மகேஷ்வரி அம்மா, பாடகர் கே கே, இயக்குனர் தருண், அஸ்சாமிய நடிகர் நிப்பன் தாஸ், நாடக கலைஞர் மஜூம்தார், பாடகர் பூபிந்தர் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்படும்.  சர்வதேச பிரிவில் பாப் ரபேல்சன், இவான் ரிட்மேன், பீட்டர் பொக்தானோ விச், டக்ளஸ் டிரம்பெல், மோனிகா விட்டி ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்படும்.

மணிப்புரி சினிமாவின் பொன்விழாவை குறிக்கும் வகையில், வடகிழக்கு இந்தியாவின் திரைப்படங்களை பிரபலப்படுத்த 5 கதையுடன் கூடிய படங்கள், 5 கதை இல்லாத படங்கள் திரையிடப்படும்

நவம்பர் 26-ந் தேதி ஷிக்மோத்சவ் (வசந்த விழா), 27-ந் தேதி, 2022 அன்று கோவா திருவிழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா கருப்பொருள் குறித்த கண்காட்சிக்கு மத்திய மக்கள் தொடர்பகம் (சிபிசி) ஏற்பாடு செய்யும்.

பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களிலிருந்து சில திரைப்படங்கள் ‘திரைப்படச் சந்தையில்’ திரையிடப்படும்.  முதன் முறையாக கேன்ஸ் நகருக்கு அணிவகுப்பு போன்ற மிகப் பெரிய  சர்வதேச சந்தைகளுக்காக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அரங்குகள்  இடம் பெற்றிருக்கும். இந்த ஆண்டு மொத்தம் 42 அரங்குகள் அமைந்திருக்கும். இவற்றில் பல்வேறு மாநில அரசுகளின்  திரைத்துறை அலுவலகங்கள், பங்கு பெறும் நாடுகளின் அலுவலகங்கள், திரைப்படத் தொழில்துறையில் செயல்படுவோருக்கான அலுவலகங்கள் அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு அலுவலகங்கள் செயல்படும். ‘திரையிடும் அறை’ என்ற புதிய முயற்சியும் முதன் முறையாக இந்த விழாவில் அமைய உள்ளது. இதில், மிகச் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவதோடு இந்தப் படங்களின் உரிமைகளை வாங்கவும், உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் அவற்றை பயன்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

ஆஸ்கர் விருது பெற்ற ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் காந்தி போன்ற திரைப்படங்கள் மாற்றுத்திறனாளிகள் பிரிவில்  திரையிடப்படும். இத்திரைப்படங்களில் ஒலி – காட்சியுடன் காட்சி விவர வசன வரிகளும் இடம் பெறும், இது மாற்றுத்திறனாளிகளும் கூட திரைப்படங்களை எளிதாக ரசிப்பதற்கு ஏற்ற திரைப்படங்களை உருவாக்க திரை தொழில்துறையின் உணர்வை மேம்படுத்துவதற்கு உதவும்.

‘டிஜிட்டல் முறையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட இந்திய படங்கள்’ பிரிவில், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இந்திய  தேசிய திரைப்பட ஆவண காப்பகங்களிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்படும். 1957 ஆடை அலங்கார பொருளிலான ஷோரப் மோடியின் திரைப்படம் நௌவ்ஷெர்வான்-இ-அடில், 1969-ல் தேசிய விருது பெற்ற பஞ்சாபி, திரைப்படமான ரமேஷ் மகேஷ்வரியின் நானக் நாம் ஜகஸ் ஹே, 1980-ன் தெலுங்கு இசை திரைப்படமான கே விஸ்வநாத்தின் சங்கராபரணம், சத்யஜித்ரேயின் அரிய திரைப்படங்களான 1977 காலத்தின் ஷத்ரஞ் கே கிலாடி, 1989-ன் சமூக திரைப்படமான கணசத்ரு உள்ளிட்டவை இந்தப் பிரிவில் திரையிடப்படும்.

*********

MSV/PKV/DL



(Release ID: 1877502) Visitor Counter : 139