சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

சிஒபி 27-ல் 2030க்கு முந்தைய லட்சியம் குறித்த அமைச்சர்கள் நிலையிலான உயர்நிலை வட்டமேசை கூட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் குறுக்கீடு செய்தார்

Posted On: 14 NOV 2022 5:21PM by PIB Chennai

சிஒபி 27-ல் இன்று 2030க்கு முந்தைய லட்சியம் குறித்த அமைச்சர்கள் நிலையிலான உயர்நிலை வட்டமேசை கூட்டத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் குறுக்கீடு செய்தார். அவரது குறுக்கீட்டின் போது கூறியதாவது:

“இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் நமது கண்ணோட்டங்களில் சிலவற்றை விரிவான உணர்வில் நான் தெரிவிக்கிறேன். பின்னர் விளக்கங்களுக்கு வருகிறேன்.

நமது வட்டமேசை கூட்டத்தின் தலைப்பே முறையாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். 2030க்கு முந்தையை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எவ்வளவு காலத்திற்கு 2030க்கு முந்தைய என்பது செல்லவிருக்கிறது? எங்களின் கருத்தில் 2030க்கு முந்தைய என்பது 2020க்கு முந்தைய என்பதிலிருந்து மாறுபட்டதாக இருக்கவில்லை. குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் மொத்த கரியமிலவாயு வெளியேற்றத்தை அளவிடுவது பொறுப்புமிக்கது. எனவே, நமது 2020க்கு முந்தைய பொறுப்பு என்பதும் 2020க்கு முந்தைய உறுதிப்பாடுகளும் நிறைவேற்றப்பட்டனவா என்பதும்  பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது 2020-ல் தொடங்குவதாக இருக்கமுடியாது.

இணைப்பு- 1 தரப்பினரும், அதேபோல், பல தனி நாடுகளும் தங்களின் 2020க்கு முந்தைய உறுதிப்பாடுகளை  இணைந்து நிறைவேற்றவில்லை என்பது எங்களின் புரிதலாகும்.  ஆனால், சிறந்த அறிவியலின்படி, உண்மையான கேள்வி என்பது 2030 வரையிலான மொத்த கரியமிலவாயு வெளியேற்றமாகும். எனவே, 2030க்கு முந்தைய லட்சியம் என்பது சம்பந்தப்பட்ட நாடுகள் கரியமிலவாயு பட்ஜெட்டில் தங்களின் நியாயமான பங்கிற்குள் இருக்கிறார்களா, வரலாற்று சிறப்பு மிக்க இரண்டு காலகட்டங்களையும், எதிர்காலத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டார்களா என்பதை அளவிடுவதாக இருக்கவேண்டும்.  இந்த அறிவியல் வகைமையின் படி 2030 மற்றும் 2050க்கு முன் சில வளர்ச்சியடைந்த நாடுகள் கரியமிலவாயு வெளியேற்றத்தில் பூஜ்ய நிலையை அடையவேண்டும் என்பது போதுமானதல்ல. எனவே, லட்சியத்திற்கான வாய்ப்புகள் பற்றி நாம் பேச்சை தொடங்கவேண்டும்.

லட்சியத்திற்கான வாய்ப்புகள் நாடுகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். இல்லை என்றால், பங்களிப்பு செய்வதற்கு குறைந்த வாய்ப்பை கொண்டுள்ளவர்களின் லட்சியத்தை அதிகரிக்கும் நமது முயற்சிகளின் விளைவு செயலின்மையாக மட்டுமே இருக்கக்கூடும். வளர்ச்சியடைந்த நாடுகள், தலைமையை ஏற்கவேண்டும். அவர்களுக்குள் வைத்திருக்கும் பெரும் திரளான நிதி மற்றும் தொழில்நுட்பம் பறிமாறப்படவேண்டும். இந்த மாநாடும், பாரீஸ் ஒப்பந்தமும் இதனை அங்கீகரித்துள்ளன.  ஆனால், நாம் போதிய செயல்களை கொண்டிருக்கவில்லை”.

**************

SG/SMB/RS/IDS(Release ID: 1875910) Visitor Counter : 133


Read this release in: English , Urdu , Hindi