பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தின் திஷா கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்

Posted On: 13 NOV 2022 6:55PM by PIB Chennai

நறுமண திட்டத்தின் கீழ், ராம்பன் மாவட்டத்தில் விரைவில் லாவண்டர் சாகுபடி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். ராம்பன் மாவட்டத்தில், மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ( திஷா) கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்த அமைச்சர், இதனைத் தெரிவித்தார். அண்டை மாவட்டமான தோடாவில் லாவண்டர் சாகுபடி வெற்றி பெற்றதையடுத்து, ராம்பன் மாவட்டத்திலும் இதனைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லாவண்டர் சாகுபடி   இளைஞர்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

களத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியமானது என்று  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் விரிவாக ஆய்வு செய்த அமைச்சர், ஒவ்வொரு திட்டத்தின் நிலை குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த பல்வேறு பிரச்னைகளுக்கு, உரிய நேரத்தில் உரிய தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களுக்கு அமைச்சர்  அறிவுறுத்தினார்.

 

அனைத்து திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தவும், அனைத்து திட்டங்களின் கீழ் 100 சதவீதம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு திட்டத்தின் பயன்கள் சென்றடையவும் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு  டாக்டர் ஜிதேந்திர சிங் உத்தரவிட்டார்.

மத்திய அரசு வழங்கும் அனைத்து திட்டங்களின் பலன்கள் கடைசி பயனாளிக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை  என்று அவர் கூறினார்.

******

MSV/PKV/DL



(Release ID: 1875672) Visitor Counter : 148