உள்துறை அமைச்சகம்

2027-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது இடத்தை இந்திய பொருளாதாரம் பிடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது- அமித் ஷா


2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் – அமித் ஷா

மருத்துவம், தொழில்நுட்பக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமிழக அரசுக்கு வேண்டுகோள்

முதலீடுகளை ஈர்க்க தமிழகத்துக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்- திரு அமித் ஷா

Posted On: 12 NOV 2022 7:13PM by PIB Chennai

மருத்துவம், தொழில்நுட்பக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமிழக  அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்விகற்கும் மாணவ, மாணவிகள் தங்களது தாய் மொழியில் கற்பதற்கு ஏற்ற வகையில்,  பல மாநில அரசுகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. அந்த நோக்கத்தின் முழுமையான பலன்களை மாணவர்கள் பெறத் தொடங்கியுள்ளனர் என்றும், தமிழ்நாட்டிலும் அத்தகைய நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

“உலகில் மிகவும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.  சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை பாதுகாப்பதும், வளர்ப்பதும் இந்த தேசத்தின் பொறுப்பாகும்” என்றார்.

மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியில்  1,350  இடங்களுக்கு தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், தற்போதைய தரவின் படில்  50 இடங்களுக்கு மட்டுமே தற்போது தமிழ் பயிற்று மொழியாக இருப்பதையும்  அவர் சுட்டிக்காட்டினார்.

“மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுத்தால், மொழியின் வளர்ச்சிக்கு இது ஒரு மிகப்பெரிய சேவையாக அமையும்," என்று அவர் கூறினார்.

தமிழகம் முதலீடுகளை ஈர்க்க மிகப்பெரிய வாய்ப்புகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர்  திரு அமித் ஷா கூறியுள்ளார்.

"தமிழகத்தின் மீது மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்". "தமிழகத்தின் முன்னுரிமை துறைகளின் மேம்பாட்டுக்காக நரேந்திர மோடி அரசு அபார கவனம் செலுத்தி வருகிறது’’ என்று திரு அமித் ஷா கூறினார்.

2009 முதல் 2014 வரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில், தமிழகம் ரூ.62,000 கோடியை  வரிப்பங்காக பெற்றது. ஆனால், தற்போது அது ரூ.1,19,455 கோடியாக அதிகரித்துள்ளது. இது 91% அதிகமாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மாநிலம் ரூ.35,000 கோடி மானிய உதவி பெற்று வந்தது. இப்போது ரூ.95,734 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும், அது 171% அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

2009-10-ல் தமிழகம் ரூ.928 கோடியை நிதி ஆணையத்தின் மானியமாக பெற்றது என்று கூறிய அவர், இது நரேந்திர மோடி ஆட்சியில் ரூ.6,000 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஹோசூர் ஆகியவற்றை இணைக்கும், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக, தமிழக பாதுகாப்பு துறையில், முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை பிரதமர் வழங்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

‘’ தமிழகத்தில் தேசிய நெடுசாலை கட்டமைப்புக்கு அரசு ரூ.8700 கோடி செலவழித்துள்ளது. இதேபோல, 2,800 கி.மீ தூரத்திற்கு சாலைகள் அமைக்க பாரத்மாலா திட்டத்தின் கீழ்  ரூ.91,570 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், 64 கூடுதல் திட்டங்களுக்கு ரூ.47,589 கோடி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’’  என்று அவர் கூறினார். 

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய, ரூ.1000 கோடி செலவில், நெய்வேலி அனல் மின்திட்டம 1000 மெகாவாட் திறன் கொண்டு  உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோவின் முதல் கட்ட திட்டத்துக்கு ரூ.3,770 கோடி செலவிடப்பட்டுள்ளது போன்ற தகவல்களையும் திரு அமித் ஷா தெரிவித்தார்.

 

2027-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது இடத்தை இந்திய பொருளாதாரம் பிடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், 2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக நிச்சயம் மாறும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு  அமித் ஷா கூறியுள்ளார்.

சென்னையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

‘’ உலகின் பொருளாதார வரிசையில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 8 ஆண்டுகளில் பிரிட்டனைப் பின்னுக்கு தள்ளி 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. அண்மையில் மோர்கான் ஸ்டான்லி நடத்திய ஆய்வில்,  2027-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது இடத்தை இந்திய பொருளாதாரம் பிடிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கணித்துள்ளது’’ என உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்புத் துறை ஆற்றவேண்டிய முக்கிய பங்கை வலியுறுத்தி பேசிய அவர், அத்தகைய செயல்பாட்டை சாத்தியமாக்க பல பயனுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது என்றார்.

“அது விண்வெளித் துறையாக இருந்தாலும் சரி, ஆளில்லா விமானத்துறையாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு உற்பத்தித்துறையில் இந்தியாவை ஒரு மையமாக உருவாக்கினாலும் சரி, பிரதமர் திரு நரேந்திர மோடி தற்போதுள்ள கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளார்” என்று அவர் மேலும் கூறினார்.

 

"தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தை அறிமுகப்படுத்தி,  சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் மற்றும் ஓசூர் நகரங்களை இணைப்பதன் மூலம் பாதுகாப்புத் துறையில்

முதலீட்டை ஈர்க்க தமிழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பை பிரதமர் உருவாக்கி கொடுத்துள்ளார்.

நிலக்கரி மற்றும் வணிகச் சுரங்கத் துறை சார்ந்த கொள்கைகளை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்,  வங்கித் துறையை முன்னேற்றுதல் என அனைத்து துறைகளிலும் நரேந்திர மோடி

அரசு பல பயனுள்ள மற்றும் வெளிப்படையான கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு 

பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார். “இதற்கு ஓர் சான்றாக உலகம் முழுவதும் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் போது, இந்தியா சொந்தமாக தடுப்பூசியை உற்பத்தி செய்த சில நாடுகளில் ஒன்றாகும் என்றார். மேலும் இந்தியா இதுவரையில்  225 கோடி டோஸ்களை வழங்கியுள்ளது மற்றும் 85 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பியதன் மூலம் நெருக்கடியிலிருந்து தப்ப உதவியது குறிப்பிடத்தக்கது", என்றார்.

இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் பொருளாதார ரீதியில் தங்களது பங்களிப்பு வழங்கத் தொடங்கியதற்கு மோடி அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களே காரணம் என்றும் அவர் கூறினார்

"அவர்கள் தங்களின் அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து மீள முடியாமல் இருந்தனர். பொருளாதார ரீதியிலான  பங்களிப்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வறுமையில் இருந்தனர்.

நரேந்திர மோடி அரசு ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை வசதி, மின் இணைப்பு, எரிவாயு இணைப்பு மற்றும் முழுமையான சுகாதாரத்தை வழங்க ரூ 5 லட்சம் வரையிலான உதவித்தொகை இன்று அரசால் வழங்கப்படுகிறது,'' என்றார்

இந்த வசதிகள் காரணமாக 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்றும் அவர்கள் புதிய எழுச்சியுடன் பொருளாதார ரீதியிலான தங்களது பங்களிப்பைத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன என்பதை நான் பார்க்கின்றேன். இந்த 60 கோடி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை நான்கு உணரமுடிகிறது என்றார்.

"அரசியல் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தின் காரணமாக, இந்தியா இன்று வேகமான பொருளாதாரமாக மாறிவிட்டது.

உலகம் முழுதும் இந்தியாவின் சாதனைகளை இன்று அங்கீகரிக்கிறது. சர்வதேச நிதி ஆணையம்  இந்தியாவை இருண்ட மண்டலத்தில் ஒரு பிரகாசமான இடமாக முத்திரை குத்தியுள்ளது," என்று அவர் கூறினார்.

சர்வதேச நிதி ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, வரும் 2022-23 ஆம் ஆண்டில்,  இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  6.8 சதவீத வளர்ச்சியுடன்  ஜி-20 நாடுகளில் 2வது இடத்தில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

"2023-24 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.1 சதவீத வளர்ச்சியுடன் இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்

இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த அவர்,

மத்திய அரசு செலவினங்களில் அதிக கவனம் செலுத்தியது என்றும் 2022-23 ஆம் ஆண்டில் மூலதன செலவினம் கடந்த ஆண்டை விட 46.8 சதவீதம் அதிகரித்தது என்றும் 2022 அக்டோபரில் பொருட்கள் மற்றும் சேவை வரி மூலம்  ரூ 1,51,718  கோடி வசூலிக்கப்பட்டது   இதுவரை இல்லாத வகையில் இரண்டாவது பெரிய வசூல் ஆகும்.

அதே மாதத்தில் இந்தியாவில் டிஜிட்டல்  பரிவர்த்தனைகள் ரூ 12.11 லட்சம் கோடியாகவும், 21 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும்

கடந்த ஆண்டை விட 7 லட்சம் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.

 

இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை கவுரவித்த உள்துறை அமைச்சர், நிர்வாக இயக்குநர் என் சீனிவாசன் மற்றும் அவரது குழுவினருக்கு பவளவிழாவையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கொண்டாட்டங்களைக் குறிக்கும் முப்பரிமாண நினைவுச்சின்னமும்,  சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி, மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆந்திர மாநில நிதியமைச்சர் திரு புக்கானா ராஜேந்திர நாத் ரெட்டி, இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என் சீனிவாசன், முழு நேர இயக்குநர் திருமதி ரூபா குருநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

*****



(Release ID: 1875521) Visitor Counter : 235


Read this release in: Marathi , Kannada , English , Urdu