பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் இயக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2022 3:02PM by PIB Chennai

மத்திய  அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கை  சான்றிதழை மேம்படுத்துவதற்காக நாடு தழுவிய இயக்கத்தை தொடங்கியுள்ளது.

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்வு  மற்றும் ஓய்வூதியத்துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக அங்கீகார தொழில்நுட்பதை தொடங்கிவைத்தார்,  பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், மத்திய அரசின் அமைச்சகங்கள், மத்திய அரசு நலவாழ்வு திட்ட மையங்கள் ஆகியவை ஓய்வூதியதாரர்கள் 'எளிதாக வாழ்வதற்கு' சிறப்பு முகாம்களை நடத்தி, டிஜிட்டல் வாழ்க்கை  சான்றிதழ் (டிஎல்சி) மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஒரு நாள் இயக்கம்   பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து குவாலியரில் உள்ள படாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் நடத்தப்பட்டது.

1.10.22 முதல் இன்று வரை, மொத்தம் 45,16,038 டிஎல்சிக்கள் வழங்கப்பட்டுள்ளன. முக அங்கீகாரம் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,36,556 ஆகும். 17,27,993 மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் இதுவரை டிஎல்சி வழங்கியுள்ளனர். இதில் முக அங்கீகாரம் பெற்றவர்கள் 1,44,719 பேர். 

இன்றைய நிகழ்ச்சியில் ஓய்வூதியம் பெறுவோர் ஆர்வத்துடன்  கலந்துகொண்டனர்.  ஓய்வூதியம் பெறுவோர், முக அங்கீகார ஜீவன் பிரமான் செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து,  தொலைபேசியில் இருந்து ஆயுள் சான்றிதழை வழங்குவது எப்படி என்பது குறித்து துறை அலுவலர்களால் வழிகாட்டப்பட்டது. ஆயுள் சான்றிதழானது 60 வினாடிகளுக்குள் உருவாக்கப்பட்டு, மொபைல் போனுக்கு அனுப்பப்படும் இணைப்பு மூலம் அதை பதிவிறக்கம் செய்யலாம். இது மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையால் எடுக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

 கைபேசி வழியாக முக அங்கீகாரம் மூலம் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் செயல்பாட்டில், ஆதார் எண், ஒருமுறை கடவுச்சொல்லுக்கான  ( ஓடிபி) கைபேசி எண், ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆர்டர் எண், வங்கி/அஞ்சல் அலுவலக கணக்கு எண் பற்றிய விவரங்கள் முதல் முறையாகத் தேவைப்படும். இந்த வசதி மாநில அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கிறது.

இந்நிகழ்ச்சியில் வங்கிகள், ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்கள், இந்திய அஞ்சலக வங்கி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

**************

MSV/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1875437) வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी