கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

வாரணாசியில் பிரதமர் விரைவு சக்தியின் பல்வேறு போக்குவரத்து நீர்வழி 2 நாள் உச்சி மாநாடு தொடக்கம்

Posted On: 11 NOV 2022 6:25PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழி மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், பேசும் போது,  “பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்து வருகிறது என்றார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நமது பொருளாதாரம் மேலும் வலுப்பெறும்.    முக்கிய தளவாட கொள்கைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு  பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது என்றார். இந்த கொள்கை முடிவின் விளைவாகவே, ஒவ்வொரு மாநிலமும், வளர்ச்சிப்பாதையில் முன்னேறி கொண்டிருக்கின்றன என்றார்.

நமது நாட்டில் 111  நீர்வழித்தடங்கள் உள்ளன. மத்திய அரசு முக்கிய தளவாட அமைப்புகள் சம்பந்தமாக மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகள் சுயசார்பு இந்தியா என்ற நோக்கத்தைச் சார்ந்தே உள்ளது என்றார். இந்த மாநாட்டில், துறைசார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையும் என்றார்.

மத்திய ஜவுளி, வர்த்தகம், தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பேசும் போது, உலகில் வளர்ந்த நாடுகள் கூட, விரைவுச் சக்தி என்ற வலிமையான ஆயுதத்தை பயன்படுத்தவில்லை என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் நம் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறது என்றார்.

குஜராத்தின் முதல்வராக திரு மோடி இருந்தபோது, உள்கட்டமைப்பு துறையில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. பின்னர் அவர் பிரதமர் பதவியேற்ற பிறகு, நாடு முழுவதும் இந்த துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரதமரின் விரைவுச் சக்தி திட்டம்  பல்வேறு திட்டங்களுக்கு தேவையான அனைத்து  உதவிகளையும் செய்து வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் போது, பிரதமர் விரைவுச் சக்தி  திட்டத்தின் கீழ், ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் வளர்ச்சியை  இந்த நாடு கண்டு வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலம் இந்த திட்டத்தின் கீழ், அதிகளவில் பலனை பெற்றுள்ளது என்றார். மேலும் இங்கு நீராதாரங்கள் போதுமான அளவில் இருப்பதால், வளர்ச்சியின் வேகம் பன்மடங்கு உயரும் என்றார்.

பிரதமர் விரைவு சக்தி தேசிய மாஸ்டர் திட்டம் என்பது மக்கள் மற்றும் பொருட்களின் தடையற்ற இயக்கத்திற்கான பல்வேறு போக்குவரத்தை ஏற்படுத்தி, முதல் மற்றும் கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதற்காக செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை உள்ளடக்கியது.  

    =========

SM/GS/RS/IDS



(Release ID: 1875313) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Hindi