தேர்தல் ஆணையம்
வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
Posted On:
09 NOV 2022 2:15PM by PIB Chennai
புனேவில் வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஒன்றான சைக்கிள் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் திரு அனுப் சந்திர பாண்டே ஆகியோர் சைக்கிள் பேரணியில் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வின் கருப்பொருள் 'பங்கேற்புத் தேர்தலுக்கான வாகனத்தை நகர்த்துங்கள்' என்பதாகும். இந்த சைக்கிள் பேரணி பாலேவாடியில் உள்ள ஸ்ரீ ஷிவ் சத்ரபதி விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கியது.
இந்த பேரணியை திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாக்காளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திரைப்படத்துறையைச் சேர்ந்த நாகராஜ் மஞ்சுளே, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அஞ்சலி பகவத், மனோஜ் பிங்கலே, அஜித் லக்ரா மற்றும் திருநங்கை ஆர்வலர் சான்வி ஜெத்வானி உட்பட பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். 'வாக்காளர் யாரும் பின்வாங்கக்கூடாது' என்ற செய்தியை பரப்பவும், ஜனநாயக அமைப்பில் தேர்தலில் பங்கேற்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும். நகரின் முக்கிய பகுதிகளில் இந்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் பேசும்போது, நகரப்புறங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்களது ஜனநாயக கடமைகளில் ஒன்றான தேர்தலில் பங்கேற்று தங்களது வாக்குகளை கண்டிப்பாக செலுத்தவேண்டும். இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கமே நகரப்புறங்களில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்றார்.
**************
SM/GS/RS/IDS
(Release ID: 1874761)
Visitor Counter : 226