புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய உயிரி எரிசக்தித் திட்டம் குறித்த அறிவிக்கை

प्रविष्टि तिथि: 07 NOV 2022 1:16PM by PIB Chennai

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தின் அறிவிக்கையை நவம்பர் 2-ஆம் தேதி வெளியிட்டது. நிதியாண்டு 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்திற்கு இந்தத் திட்டத்தை அமைச்சகம் தொடர்ந்துள்ளது. இத்திட்டத்தை இரண்டு கட்டங்களில் அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரூ. 858 கோடியில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கழிவிலிருந்து எரிசக்தி திட்டம், உயிர்மம் திட்டம் மற்றும் உயிரி எரிவாயு திட்டம் ஆகிய துணைத் திட்டங்கள் தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

திட்டத்தின் வழிமுறைகளை https://mnre.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அணுகலாம்.

**************

AP/RB/IDS


(रिलीज़ आईडी: 1874247) आगंतुक पटल : 485
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Telugu