தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் ஒரு மக்களவை தொகுதி, ஒடிசா, ராஜஸ்தான், பீகார், உ.பி, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Posted On: 05 NOV 2022 11:37AM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் மைன்புரி மக்களவை தொகுதி, ஒடிசாவின் பதாம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷாகர், பீகார் மாநிலம் குர்ஹானி, உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர், சத்தீஸ்கரின் பானுபிரதாப்நகர் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான அட்டவனை வருமாறு;

தேர்தல் அறிவிக்கை வெளியீடு; நவம்பர் 10

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்; நவம்பர் 17

வேட்புமனுக்கள் பரிசீலனை; நவம்பர் 18

மனுக்களை விலக்கிக்கொள்ள கடைசிநாள்; நவம்பர் 21

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்; டிசம்பர் 5

வாக்கு எண்ணிக்கை; டிசம்பர் 8

டிசம்பர் 10ந்தேதி இடைத்தேர்தல் நடைமுறைகள் நிறைவுபெறும்.

தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகள், அவை இடம்பெற்றுள்ள மாவட்டங்களில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

*********


(Release ID: 1873895) Visitor Counter : 222