ஜல்சக்தி அமைச்சகம்
2022 இந்திய நீர் வாரத்தின் 3 ஆம் நாள்
ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் முக்கிய நிகழ்வுகளுக்கு தலைமை ஏற்பு
Posted On:
04 NOV 2022 9:29PM by PIB Chennai
3 தொழில்நுட்ப அமர்வுகள் இருந்தன. அதாவது நீர் தொடர்பான பேரிடர்-வெள்ளம் மற்றும் வறட்சியை நிர்வகித்தல், ஒரு கூட்டு நீர் நிர்வாக ஒழுங்கு முறையை நிறுவுதல் மற்றும் சுற்றுச்சூழல் வாழ்வாதாரத்திற்கான நீர். 4 குழு விவாதங்கள் நடந்தன. அதாவது நகர்ப்புற நீர் திட்டமிடல் மற்றும் மேலாண்மையில் உள்ள சவால்கள், தேசியக் கண்ணோட்டத்தை நோக்கிச் செல்வது, எதிர்பாராத சூழ்நிலையில் விவசாயத்தின் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான நீர்மின்சாரத்தின் பங்கு. 3 தனி நிகழ்வுகளும் இருந்தன. உலக வங்கியால் நீர் மேலாண்மையில் தொழில்நுட்பம் மற்றும் புதுமை, இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் கூட்டாண்மை மூலம் நிகழ்வு மற்றும் உலக வங்கியின் நிறுவனங்களில் ஒன்று தொடர்பான நிகழ்வு.
ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல், வளர்ந்து வரும் உணவு மற்றும் நீர் பாதுகாப்பை நிலையான முறையில் சந்திப்பதற்காக நீர்வளத் திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நிலுவையில் இருக்கும் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை விரைவாகச் செயல்படுத்துவதற்கும், கருத்து வேறுபாடுகளை இணக்கமாகத் தீர்த்து, ஒருமித்த கருத்துக்கு வருவதற்கும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
'வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற நீர் தொடர்பான பேரிடர்களை நிர்வகித்தல்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளம் மற்றும் நீர் தேங்கி நிற்கும் சூழல் அமைப்புகள், வெள்ளப் பேரிடர்களை முன்னறிவிப்பு மூலம் குறைப்பதற்கான புயல் நீர் வடிகால் நெட்வொர்க் அமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.
'கூட்டு நீர் நிர்வாக ஒழுங்குமுறையை நிறுவுதல்' என்ற தலைப்பில் நடந்த மற்றொரு கருத்தரங்கில், நைட்ரஜன் அளவு அதிகரிப்பதால் விவசாயம் மாசுபடுவது, பயிர் நைட்ரஜன் சமநிலையை பராமரித்தல், துல்லியமான நீர்ப்பாசனம் அறிமுகம், சாகுபடி நுட்பங்களை மேம்படுத்துதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. 'சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரத்திற்கான நீர்' கருத்தரங்கின் கீழ், மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகளில் சுற்றுச்சூழல் ஓட்டங்களை நிர்வகிப்பதில் உள்ள சவால்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மக்கள் மற்றும் பொருளாதாரம், நீர் தர கண்காணிப்புக்கான புதுமையான கட்டமைப்பு, நீர்வாழ் வளங்கள், உயிரியல் சுகாதார நிலையின் விவரம், சதுப்புநிலங்களை நிலைநிறுத்துவதில் விளிம்புநிலை மீனவ மக்களின் பங்கு, சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியுடன் தரமான உள்கட்டமைப்பை சமபங்கு வலுப்படுத்துதல், நீர் சேகரிப்புக்கான கிணறுகளை மீட்டெடுத்தல் போன்றவை விவாதிக்கப்பட்டன.
**************
(Release ID: 1873882)
Visitor Counter : 176