பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை முகாம் 2.0 வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதால், பணியிடங்களில் தூய்மையின்மை மற்றும் நிலுவை மனுக்களைக் குறைத்தல் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறியிருக்கிறது - மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங்

Posted On: 04 NOV 2022 4:59PM by PIB Chennai

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தூய்மை முகாம் 2.0-மூலம், பணியிடங்களில் தூய்மையின்மை மற்றும் நிலுவை மனுக்களைக் குறைத்தல் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின்  தொலைநோக்குப் பார்வை இலக்கு நிறைவேறியிருப்பதாக மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாடு முழுவதும் சிறப்புத் தூய்மை முகாம் நடத்தப்பட்டது என்றார்.  இந்த முகாமில் தேவையில்லாத ஆவணங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.364 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும், மொத்தம் 88 லட்சம் சதுரஅடி இடம் காலியானதாகவும் தெரிவித்தார்.

2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்புத் தூய்மை முகாமைக் காட்டிலும் இந்த 2.0 முகாம் 15 மடங்கு பெரியது என்றும், நாடு முழுவதும் 99,633 இடங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதன் மூலம் 4,36,855 பொதுமக்கள் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாகவும், இந்த சிறப்பு முகாம் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது, துறைமுகம்,கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள்  அமைச்சக செயலாளர் திரு வி ஸ்ரீநிவாஸ், ரயில்வே வாரியத் தலைவர் திரு சஞ்சீவ் ரஞ்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

**************

SM/ES/KPG/IDS

 


(Release ID: 1873761) Visitor Counter : 167


Read this release in: English , Urdu , Hindi , Telugu