தேர்தல் ஆணையம்
குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிப்பு
Posted On:
03 NOV 2022 1:39PM by PIB Chennai
குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 1-ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டு அன்றைய தினமே வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நவம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாகும். இரண்டாவது கட்ட தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி நிறைவடைகிறது. முதற்கட்ட தேர்தலில் தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்களை நவம்பர் 15 ஆம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற நவம்பர் 17 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள நவம்பர் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் நிறைவடையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4.91 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
******
SM/PLM/PK/IDS
(Release ID: 1873435)
Visitor Counter : 199