சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில், சிறப்பு தூய்மை முகாம் 2.0 நடத்தப்பட்டது

Posted On: 02 NOV 2022 4:57PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல்துறை, வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகம் சார்பில், சிறப்பு தூய்மை முகாம் அக்டோபர் 2-ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதற்காக அந்த அமைச்சகம் இந்திய தாவரவியல் ஆய்வு அமைப்பு, இயற்கை வரலாறு தேசிய அருங்காட்சியகம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட 73 இடங்களை அடையாளம் கண்டு, தூய்மை பணிகளை மேற்கொண்டது.

இந்த முகாமில் மரச்சாமான் மற்றும் உலோகக் கழிவுகள் உள்ளிட்ட 174 டன் எடையிலான தேவையில்லாத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. அதேபோல், கணினி சார்ந்த பிரிண்டர், ஸ்கேனர், மவுஸ் உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இ- கழிவுகள் அகற்றப்பட்டன. இதன்மூலம் 41 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட சதுர அடி இடம் காலியானது.  

இதேபோல் ஆயிரத்து 182 குறைதீர்வு மனுக்கள் அடையாளம் காணப்பட்டு அதில் இருந்து 1029 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் கடலோரப் பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர்களின் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

**************

SM/ES/IDS


(Release ID: 1873217) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi