அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், உமிழ் நீர் மூலமான நேரடி மாதிரி பரிசோதனை கருவியின் மேம்பாடு மற்றும் வணிக மயமாக்கலுக்கு உதவுகிறது. இந்த கருவியின் மேம்பாட்டுக்காக சென்னையைச் சேர்ந்த க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு 4 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது
Posted On:
01 NOV 2022 1:14PM by PIB Chennai
கோவிட் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கருவிகள், கோவிட் தடுப்பூசிகள், தனிநபர் பாதுகாப்பு கவசஉடைகள் உள்ளிட்டவை குறைந்த கால அளவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. இதையடுத்து மருத்துவ கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் பல்வேறு நிறுவனங்களுக்கு நிதியுதவி ஆதரவை வழங்குகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த க்ரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு 4 கோடி ரூபாய் கடன் உதவியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், (TDB) கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 9 கோடி ரூபாயாகும். இந்நிறுவனம் பல்வேறு தொற்று நோய்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளை மேம்பட்ட மூலக்கூறு நடைமுறைகள் மூலம், உமிழ் நீர் மாதிரி சேகரிப்பு வாயிலாக மேற்கொள்ளும் கருவிகளை உற்பத்தி செய்து அவற்றை வணிகமயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. ஏற்கனவே கோவிட் பாதிப்பு தொடங்கிய காலத்தில் க்ரியா நிறுவனம் மூக்கு வழி மாதிரி சேகரிப்பு பரிசோதனை கருவியை உள்நாட்டிலேயே தயாரித்து முதலாவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஒப்புதலை பெற்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் நிதி சேவைகள், செயலாளர் ராஜேஷ் குமார் பதக், “இந்தியா புதுமை தீர்வுகளை வழங்கி தனது திறன்களை மீண்டும் நிரூபிக்கும் நேரம் வந்துள்ளது. குறைந்த செலவில் புதுமை தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்களும் முன்வரவேண்டிய சரியான நேரம் இது. ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கான பிரதமரின் நோக்கத்திற்கு ஏற்ப, தனியார் நிறுவனங்களிடையே தன்னம்பிக்கையையும், பலத்தையையும் ஏற்படுத்தி சுயசார்பு மூலம் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்க இது வகை செய்யும் என்றார்.
**************
(Release ID: 1872798)
Visitor Counter : 165