ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளிஉற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை திட்டம் குறித்து ஆய்வு செய்து, பயனாளிகளுடன் கலந்துரையாடினார்

Posted On: 01 NOV 2022 4:45PM by PIB Chennai

உயர் தரம் வாய்ந்த ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய வர்த்தகம் & தொழில், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில், மத்திய அரசின் ஜவுளிஉற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஜவுளி உற்பத்தி யாளர்களுடன் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில், உயர் தரம் வாய்ந்த ஜவுளி உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல் இந்தியத் தயாரிப்புகளை, உலகத் தரம் வாய்ந்தவையாக  மாற்றுவதையே நோக்கமாகக்கொண்டு செயல்பட வேண்டும் எனவும், பயனாளிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஜவுளித்துறை தொழிலாளர்களுக்கு, அவர்களின் பணிக்கு ஏற்ப ஊதியம், சமூகப்  பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொணடார்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கூடுதல் வருவாயை ஈட்டுவதுடன், ஏற்றுமதியை அதிகாரிக்கும் அளவுக்கு ஜவுளித்துறை உள்கட்டமைப்பு வசதிகளுடன் திகழ்வதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் பொருமிதம் தெரிவித்தார். 

 

**************

AP/ES/IDS


(Release ID: 1872797) Visitor Counter : 154


Read this release in: Urdu , English , Hindi