விவசாயத்துறை அமைச்சகம்

2022 நவம்பர் 1 அன்று புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான தோட்டக்கலை மதிப்பு இணைப்பின் விரிவாக்கம் நிகழ்ச்சிக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்

Posted On: 31 OCT 2022 9:16AM by PIB Chennai

இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், 2022 நவம்பர் 1-ஆம் தேதியன்று, மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள வைகுந்த மேத்தா தேசிய மேலாண்மை கூட்டுறவு நிறுவனத்தில், “இந்தியாவில் தோட்டக்கலை மதிப்பு இணைப்பின் விரிவாக்கம் - சாத்தியம் மற்றும் வாய்ப்புகள்” என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் தோட்டக்கலைத் துறை தொடர்பான கண்காட்சியை தொடங்கி வைக்கும் அவர், விவசாயத் துறையில் சிறந்த பங்களிப்பு செய்த விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொடக்க
வேளாண் நிறுவனங்கள், வேளாண் துறை சார்ந்த புதிய தொழில்முனைவோர், வங்கியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளார். மேலும், இயற்கை வேளாண்மை இயக்கத்தில் தோட்டக்கலைத் துறையின் வெற்றிகள் குறித்த “இயற்கை வேளாண்மையில் தோட்டக்கலைப் பயிற்சி” என்ற புத்தகத்தையும் அமைச்சர் வெளியிடுகிறார்.

“இந்தியாவில் தோட்டக்கலை மதிப்பு இணைப்பின் விரிவாக்கம் - சாத்தியம் மற்றும் வாய்ப்புகள்” நிகழ்ச்சியில், விவசாயிகள், தொடக்க வேளாண் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கைகளை வகுப்பவர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் உரையாற்றுவார்கள்.

மேலும், இந்நிகழ்வானது விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பல்வேறு பயிர் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மையங்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே மேடையில் இணைக்கும் பாலமாக விளங்கும்.


மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1872130


**************

SM/KG/KRS



(Release ID: 1872236) Visitor Counter : 160