கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டவும், நாட்டிற்கு கூடுதல் உறுதிமிக்க எதிர்காலத்தை உருவாக்கவும் வாழும் கலை அமைப்புடன் கலாச்சார அமைச்சகம் இணைந்துள்ளது

Posted On: 27 OCT 2022 3:11PM by PIB Chennai

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா பதாகையின் கீழ், சிறந்த ஆரோக்கியத்திற்கான தியானத்துடன் மனநலம் குறித்து பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்பித்து வழிகாட்ட வாழும் கலை அமைப்புடன் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்துள்ளது. சுமார் இருபதாயிரம் பேர் திரண்டிருந்த மன்றத்தில் கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை முன்னிலையில், வாழும் கலை அமைப்பின் சர்வதேச தலைமையகம் உள்ள பெங்களூருவில் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், 2022 அக்டோபர் 26 அன்று இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

வாழும் கலை அமைப்பின் ஆசிரியர்கள் தியானப் பயிற்சியாளர்களாகவும், நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களில் ஆர்வம் உள்ள நபர்கள், தியானத் தூதர்களாகவும், இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்கள் இணைந்து பெருந்திரள் மக்களை குறிப்பாக இளைஞர்களை பயிற்றுவிப்பார்கள். சிறந்த ஆரோக்கியத்தை நோக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டவும், நாட்டிற்கு கூடுதல் உறுதிமிக்க எதிர்காலத்தை உருவாக்கவும் மக்கள் பங்கேற்பு மாதிரியிலான செயலாக இந்தத் திட்டம் இருக்கும். பல கட்டங்களாக இது அமலாக்கப்படும். மத்திய கலாச்சார அசைமச்கத்தின் ஆதரவிலான இந்தத் திட்டம் 2023 சுதந்திர தினத்தன்று நிறைவடையும்.

*************

(Release ID: 1871251)


(Release ID: 1871325) Visitor Counter : 223
Read this release in: English , Urdu , Hindi