தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்புத் துறையில் 'செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவுகளை பயன்படுத்துதல்' குறித்த ஆலோசனைகளை பெறுவதற்கான கடைசி தேதியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நீட்டித்துள்ளது
Posted On:
21 OCT 2022 4:14PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 'தொலைத்தொடர்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவுகளை பயன்படுத்துவது' தொடர்பான கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கலந்தாய்வில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 14-ஆம் தேதியும், எதிர்கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 28-ஆம் தேதியும் கடைசி நாளாகும்.
இந்த கட்டுரை மிகவும் விரிவாக இருப்பதால் விரிவான விவாதங்கள் தேவை, விவாதித்து பதிலளிக்க கூடுதல் காலஅவகாசம் தேவை என்பதால் கடைசி தேதியை நீட்டிக்கும்படி எழுந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கருத்துகளை தெரிவிக்க நவம்பர் 4-ஆம் தேதியும், எதிர்கருத்துகளை தெரிவிக்க நவம்பர் 18-ஆம் தேதியும் கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் மற்றும் எதிர்கருத்துக்களை இந்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசகர் திரு.ஆனந்த் குமார் சிங் என்பவரின் advqos@trai.gov.in. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஏதேனும் தகவல்கள் பெற வேண்டுமெனில் +91-11-23210990 என்ற எண்ணில் திரு.ஆனந்த் குமார் சிங்-கை தொடர்பு கொள்ளலாம்.
**************
KG/ANA/SNE
(Release ID: 1870033)
Visitor Counter : 167