மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

காந்திநகரில், முதல் 'செமிகான் இந்தியா ஃப்யூச்சர் டிசைன்' என்ற விளம்பர பிரச்சாரத்தை மத்திய இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Posted On: 17 OCT 2022 5:22PM by PIB Chennai

மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத்துறை அமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், முதல் 'செமிகான் இந்தியா ஃப்யூச்சர் டிசைன்' என்ற விளம்பர பிரச்சாரத்தை இன்று குஜராத்தின் காந்தி நகரில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் குறைமின்கடத்தி தொழிலை ஊக்கப்படுத்தும் முயற்சிகளின் ஒருபகுதியாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாடு முழுவதும் 'செமிகான் இந்தியா ஃப்யூச்சர் டிசைன்' என்ற விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியா டெக்டேட்டில் நம்பிக்கை வைத்து, குஜராத் புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக செமிகான் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளனர். 

மாணவர்கள், புத்தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களிடையே உரையாற்றிய திரு.ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் எண்ணத்தின் அடிப்படையில், புத்தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் செமி கண்டக்டர் வடிவமைப்பில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விளம்பர பிரச்சாரம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

“செமிகான் இந்தியா திட்டத்தை ஒவ்வொரு மாணவனுக்கும், கல்லூரிக்கும் எடுத்து சென்று, செமிகான் இந்தியா பயணத்தில் பல இளம் இந்தியர்களை பங்கேற்க உற்சாகப்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர் கூறினார். மாணவர்கள், புத்தொழில் முனைவோர் செமிகான் இந்தியா ஃப்யூச்சர் டிசைன் விளம்பர பிரச்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1868535

**************


(Release ID: 1868588)
Read this release in: English , Urdu , Hindi