பாதுகாப்பு அமைச்சகம்

மத ரீதியிலான தடைகளைத் தாண்டி தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பொது மக்கள் பங்களிக்குமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 16 OCT 2022 2:08PM by PIB Chennai

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒவ்வொரு இந்திய ராணுவ வீரர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரிடமும் மிகுதியாகக் காணப்படும் நம் நாடு குறித்த தேசியப் பெருமை மற்றும் தேசபக்தியின் பண்புகளை பின்பற்றி மத ரீதியிலான தடைகளைத் தாண்டி தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்குமாறு பொது மக்களை வலியுறுத்தியுள்ளார்.

2022 , அக்டோபர் 16ஆம் தேதி, 'மாருதி வீர் ஜவான் டிரஸ்ட்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தியாகிகளுக்கான கவுரவம் என்ற பொருள்படும் 'ஷாஹீதோன் கோ சலாம்' நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் உரையாற்றினார். ஆயுதப்படை வீரர்கள் பிராந்தியம், மதம், சாதி மற்றும் மொழி ஆகியவற்றின் தடைகளைத்தாண்டி மேன்மை அடைந்து வருவதாக அவர் கூறினார்.

”தாய்நாட்டிற்கு தன்னலமின்றி சேவை செய்து, பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள், அதே போல் நமது புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வீரர்களின் இலட்சியங்களையும், தீர்மானங்களையும் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நமது தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்து, வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கையான 'புதிய இந்தியாவை' உருவாக்குவதில் தங்கள் பங்கை ஆற்றுங்கள்," என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்,

 

வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில், நாட்டைக் காப்பதில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளிப்பது ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதும் திரு ராஜ்நாத் சிங், சேவையில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வுபெற்ற  பணியாளர்களின் அடுத்த உறவினர்களின் நலனுக்காக அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.

“நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, மத்திய ஆயுதப்படை (சிஏபிஎஃப்) ஜவான்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ‘பாரத் கீ வீர்’ நிதியும் ஒன்றாகும்.

சமீபத்தில், பாதுகாப்பு அமைச்சகம் ‘மா பாரதி கே சபூத்’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியதை குறிப்பிட்ட அமைச்சர், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பதை கருத்தில் கொண்டு நிதி ஆதார நடவடிக்கைகளில் மக்கள் அதிக பங்களிப்பை வழங்க முடியும்,” என்றார்.

 

ஆயுதப் படைகளுக்கு உள்நாட்டு அதிநவீன ஆயுதங்களை வழங்கி, பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை; அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் விரைவில் முழுமையான தற்சார்பு  அடையும் என்றும் அவர் கூறினார்.

"இந்தியா அமைதியை விரும்பும் தேசம், எந்த நாட்டையும் தாக்குவது தொடர்பான நடவடிக்கைக்ளில் ஈடுபடாது. ஆனால் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சித்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

******

GS/SM/DHA



(Release ID: 1868278) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Marathi