விவசாயத்துறை அமைச்சகம்
நாட்டில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார் - திரு.தோமர்
Posted On:
13 OCT 2022 6:52PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிராமங்களின் மேம்பாடு, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாக மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். உலக அரசியல் அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கும், நமது கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும், பாரத அன்னையின் புகழை உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் என்று கூறினார். பிரதமர் தலைமையிலான அரசு, நாட்டில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
புனேயில் இன்று நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 8-வது பொதுக்கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திரு.தோமர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள ஏழைகள் சமத்துவமின்மையிலிருந்து விடுபடாத வரை நாட்டின் வளர்ச்சிப் பயணம் முழுமை அடையாது என்றும் தோமர் கூறினார்.
**************
KG/SM/IDS
(Release ID: 1867545)
Visitor Counter : 172