சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையினர் திட்டங்களின்கீழ் பயனாளிகள்

Posted On: 04 AUG 2022 6:06PM by PIB Chennai

அமைச்சகம் ஏற்கனவே செயல்படுத்திவரும் சீகோ அவ்ர் கமாவோ, உஸ்த்தாத், ஹமாரி தரோகர், நய் ரோஷ்னி, நய் மன்சில் ஆகிய 5 திட்டங்களை இணைத்து முக்கிய திட்டமாக பிரதமரின் விராசத் கா சம்வர்தன் திகழ்கிறது. இது குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு திறன் வளர்ப்பு, பயிற்சி, தலைமைப்பண்பை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர், கல்வி ஆகிய ஆதரவுகளை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக சீகோ அவ்ர் கமாவோ, உஸ்த்தாத் ஆகிய திட்டங்களை சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. சீகோ அவ்ர் கமாவோ திட்டம் (கற்றல் மற்றும் வருவாய் ஈட்டுதல்) என்பது திறன் வளர்ப்பு மற்றும் பணி வழங்குதலை இணைத்து செயல்படுத்தப்படுகிறது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், சிறுபான்மையின இளைஞர்களுக்கு (18 முதல் 45 வயது வரை) பல்வேறு அதிநவீன/பாரம்பரிய திறனை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. உஸ்த்தாத் திட்டம், 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது சிறுபான்மையின சமூகத்தினருக்கு கைவினைத்திறன்/ கலைத் திறனை அளிப்பது மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் திட்டத்தின் பயனாளிகள் குறித்த விவரங்கள் கீழே உள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளன.

 

திட்டம்

பயிற்சிபெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை

சீகோ அவ்ர் கமாவோ

4,68,078

உஸ்த்தாத்

23,130

 

  1. அமைச்சகத்தால் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படும் திட்ட அமலாக்க முகமைகளால் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிதிஆயோக்கின் அரசுசாரா அமைப்புகளுக்கான தர்பன் வலைதளத்தில் திட்ட அமலாக்க முகமைகள் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாடுகளை சிறப்பான முறையில் பார்க்கவும், கண்காணிக்கவும், திட்டங்கள் குறித்த தரவுகளை அதற்கான வலைதளத்தில் உடனுக்குடன் திட்ட அமலாக்க முகமைகள் பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களை மக்களவையில் இன்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.ஸ்மிருதி சுபின் இரானி எழுத்துமூலம் அளித்துள்ளார்.

*****



 



(Release ID: 1866832) Visitor Counter : 103


Read this release in: English , Urdu