சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரங்கா மலை - அம்பா கோயில் - அபு சாலை புதிய ரயில் பாதைக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவைக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது

Posted On: 13 JUL 2022 7:43PM by PIB Chennai

தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் திரு. இக்பால் சிங் லால்புரா மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள், தரங்கா மலை - அம்பா கோயில் - அபு சாலை புதிய ரயில் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தரங்கா மலை சமணர்கள் புனித யாத்திரை செல்லும் பகுதியாகும். இதில் சுமார் 19 கோயில்கள் உள்ளன. அதில் ஜினாலயா கோயில் இரண்டாவது தீர்த்தங்கரான பகவான் அஜீத்நாத் தீர்த்தங்கருடையது. இந்த புதிய ரயில் பாதையானது மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன் சமண பக்தர்கள் மலையில் உள்ள 19 கோயில்களுக்கு சென்று வழிபட உதவி செய்கிறது.

இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும், சிறுபான்மையினர் சமூகமான சமண சமூகத்தின் சார்பாக, தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம், பிரதமரின் இந்த செயலை மிகவும் பாராட்டியுள்ளது. 1930-ஆம் ஆண்டு முதல் போராடி வரும் சமண சமூகத்தின் 100 ஆண்டுகால கோரிக்கையை இது பூர்த்தி செய்துள்ளது. 

 **************


(Release ID: 1866722) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Hindi