இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
17வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,“கிக் ஆஃப் த ட்ரீம்” என்ற இயக்கத்தை திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கிவைத்தார்
प्रविष्टि तिथि:
09 OCT 2022 10:28PM by PIB Chennai
அக்டோபர் 11ம் தேதி முதல் தொடங்கவுள்ள 17வயதுக்குட்பட்ட மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,“கிக் ஆஃப் த ட்ரீம்” என்ற இயக்கத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கிவைத்தார். இப்போட்டியை முதன் முறையாக இந்தியா நடத்துகிறது.
இதுகுறித்து தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரு அனுராக் தாக்கூர், இந்த சவாலை முன்னெடுத்துச் செல்ல தனது அமைச்சரவை சகா திரு கிரண் ரிஜிஜூ, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை அழைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கோவா, மும்பை மற்றும் புவனேஸ்வர் மைதானங்களில் நடைபெற உள்ள போட்டிகளை அனைத்து இந்தியர்களும் காண வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், கால்பந்து விளையாட்டின் சுவாரசியமான வீடியோ காட்சிகளை பதிவிட்டு அவர்களுடைய ஆதரவை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1866335
------------------
IR/RS/SRI/RR
(रिलीज़ आईडी: 1866373)
आगंतुक पटल : 150