அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் உள்ள முன்னேற விரும்பும் மாவட்டத்தில் அறிவியல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அதனை புத்தொழில்களுடன் இணைத்தார்
Posted On:
08 OCT 2022 5:01PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் உள்ள முன்னேற விரும்பும் மாவட்டத்தில் அறிவியல் அருங்காட்சியகத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று திறந்து வைத்தார். மாநில முதலமைச்சர் திரு ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைப் புத்தொழில்களுடன் இணைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த மலைப்பாங்கான பகுதியில் உள்ள இந்த அதிநவீன நிறுவனம் இளைஞர்களின் திறன்களைக் கண்டறியவும், அவர்களின் புதுமையான திறன்களைப் பயன்படுத்தி பிற்கால வாழ்க்கையில் வாழ்வாதாரத்தைக் கண்டறியவும் ஊக்குவிக்கும் என்றார்.
இமாச்சலப் பிரதேசம் பல்லுயிர் வளம் கொண்ட இமாலய மாநிலமாக இருப்பது வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானது என்றும், நாட்டின் தற்போதைய புத்தொழில் வளர்ச்சியில் ஈடுபடுவதற்கு இளம் கண்டுபிடிப்பாளர்களுடன் கைகோர்க்க உயிரி தொழில்நுட்பத் துறை தயாராக உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இமாச்சலப் பிரதேசம் போன்ற இமயமலை மாநிலங்களின் புவியியல் மற்றும் தட்பவெப்ப நிலைகள் மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களை வளர்ப்பதற்கு சாதகமாக உள்ளன. இவற்றை வேளாண் தொழில்நுட்ப மற்றும் நறுமண நிறுவனங்களாக உருவாக்க முடியும் என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் சிஎஸ்ஐஆர் ஆதரவுடன் கூடிய நறுமணப் பொருட்கள் இயக்கத்தை ஆய்வுசெயது அமலாக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருக்கு உறுதியளித்த அமைச்சர், வழங்கினார், இது இமாச்சலில் பெரிய அளவில் பிரதிபலிக்கும் என்றார்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் 75 அறிவியல் அருங்காட்சியகங்களை நிறுவ முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அறிவியல் அருங்காட்சியகங்களின் நோக்கம், கடந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் அறிவியல் பயணம் மற்றும் சாதனைகளை எடுத்துரைப்பது மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
**************
(Release ID: 1866122)
Visitor Counter : 180