பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

முந்தைய ஜம்மு -காஷ்மீர் மாநில தொகுப்பைச் சேர்ந்தவர்களும் தற்போது தேசிய தலைநகரில் பணியமர்த்தப்பட்டிருப்போருமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடன் உணவு நேர கலந்துரையாடலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நடத்தினார்

Posted On: 07 OCT 2022 3:41PM by PIB Chennai

முந்தைய ஜம்மு -காஷ்மீர் மாநில தொகுப்பைச் சேர்ந்தவர்களும் தற்போது தேசிய தலைநகரில் பணியமர்த்தப்பட்டிருப்போருமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுடன் உணவு நேர கலந்துரையாடலை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்புபுவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி டாக்டர் ஜிதேந்திர சிங் நடத்தினார்.

ஜம்மு- காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடி உயர் முன்னுரிமை அளிப்பதாக இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்த அமைச்சர், நாட்டில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக ஜம்மு-காஷ்மீரை மாற்றுவதற்கான பொறுப்பு அகில இந்திய சேவை அதிகாரிகளுக்கு உள்ளது என்றார். வளர்ச்சி மற்றும் அமைதியின் புதிய விடியலை ஜம்மு-காஷ்மீர் கண்டிருப்பதாக அவர் கூறினார்.

2022 ஜனவரி முதல் இதுநாள் வரை 1.62 கோடி சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர், 75 ஆண்டு சுதந்திரத்தில் இதுவே மிகவும் உயர்ந்த எண்ணிக்கை என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் பயணத்தையொட்டி டாக்டர் ஜிதேந்திர சிங் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போது, குஜ்ஜார் போன்று பகாரிகளுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர், 370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின், ரூ. 56 ஆயிரம் கோடி முதலீடு ஜம்மு- காஷ்மீருக்கு வந்துள்ளது என்றும், இந்த யூனியன் பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகள் இதனால் உருவாகியுள்ளன என்றும் கூறினார்.

விரிவான புதிய திரைப்பட கொள்கை தொடங்கப்பட்டதை அடுத்து ஒரே ஆண்டுக்குள்  140 படப்பிடிப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் திறமைமிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, நவீன வசதிகள் கொண்ட திரைப்பட ஸ்டுடியோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

**************

 

SMB/RS/SM



(Release ID: 1865915) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi