ஐஃஎப்எஸ்சி ஆணையம்
azadi ka amrit mahotsav

நிலையான நிதி குறித்த நிபுணர்கள் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

प्रविष्टि तिथि: 05 OCT 2022 10:46AM by PIB Chennai

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையத்தால் அமைக்கப்பட்ட நிலையான நிதி குறித்த நிபுணர்கள் குழு, தனது இறுதி அறிக்கையை ஆணையத்தின் தலைவரிடம் அக்டோபர் 3, 2022 அன்று ஒப்படைத்தது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் திரு சி. கே. மிஸ்ரா தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட நிலையான நிதி சூழலியலின் தலைவர்களும், நிபுணர்களும் இதில் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.

சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளுடன் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை ஒருங்கிணைத்தல், ஆணையம் மூலமாக முதலீட்டு வரத்துகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வது, பசுமை மற்றும் நிலையான நிதி துறையில் புதுமையான நிதி தயாரிப்புகளின் வளர்ச்சிக்கு ஆதரவு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

https://ifsca.gov.in/CommitteeReport என்ற இணைய பக்கத்தில் குழுவின் அறிக்கை இடம்பெற்றுள்ளது.


(रिलीज़ आईडी: 1865317) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu