ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் சக்தி அமைச்சகம், தூய்மை இந்தியா தினத்தை அக்டோபர் 2-ஆம் தேதி கொண்டாடுகிறது
Posted On:
01 OCT 2022 3:56PM by PIB Chennai
அக்டோபர் 2 ஆம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நாடு கொண்டாடும் நிலையில், குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு தூய்மை விருதுகளை வழங்குகிறார்.
குடிநீர் மற்றும் துப்புறவு துறை அக்டோபர் 2 ஆம் தேதி புது தில்லி விஞ்ஞான் பவனில் தூய்மை இந்தியா தினத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்துறையானது, தூய்மை இந்தியா கிராமப்புறம், ஜல் ஜீவன் மிஷன் ஆகிய மத்திய அரசின் இரண்டு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதை நிறுத்தும் நோக்கத்துடன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தூய்மை இந்தியா கிராமப்புறம் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2, 2019 அன்று, நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு, கிராமங்களில் இந்த நிலையை நிலைநிறுத்தவும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மூலம் கிராமப்புறங்களில் தூய்மையின் அளவை மேம்படுத்தவும், 2020-ல் தூய்மை இந்தியா கிராமப்புறம் 2.0 தொடங்கப்பட்டது.
15 ஆகஸ்ட் 2019 அன்று, ஜல் ஜீவன் மிஷன் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்தது. மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான கூட்டு முயற்சியின் மூலம், 3 ஆண்டுகளில் குறுகிய காலத்தில் 10.27 கோடி கிராமப்புற குடும்பங்கள் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பெறுகின்றன.
இரண்டு முதன்மையான திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முன்மாதிரியான முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக, துறை பல்வேறு போட்டிகள், பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சிறப்பாக செயல்படும் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள்/ மாவட்டங்கள் பாராட்டப்படும். குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய ஜல் சக்தி அமைச்சரால் பின்வரும் பிரிவுகளின் கீழ் பல்வேறு விருதுகள் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1864116
*******
(Release ID: 1864186)
Visitor Counter : 186