பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புக் கணக்குத் துறையின் 275வது ஆண்டு தினத்தின் போது முக்கிய டிஜிட்டல் முயற்சிகளை அறிமுகப்படுத்தினார் பாதுகாப்புத் துறை அமைச்சர்
Posted On:
01 OCT 2022 1:04PM by PIB Chennai
புது தில்லியில் பாதுகாப்புக் கணக்குத் துறையின் 275வது ஆண்டு தினக் கொண்டாட்டத்தின் போது பல டிஜிட்டல் முன்முயற்சிகளைத் தொடங்கினார். இந்த முயற்சிகளில் சிஸ்டம் ஃபார் பென்ஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (SPARSH) மொபைல் செயலி; அக்னிவீரர்களுக்கான சம்பள முறை; டிஃபென்ஸ் டிராவல் சிஸ்டத்தில் சர்வதேச விமான டிக்கெட் முன்பதிவு தொகுதி; பாதுகாப்பு கணக்கு ரசீதுகள் மற்றும் கட்டண முறை, பாதுகாப்பு சிவில் ஊதிய அமைப்பு கணக்குகள், மனித வள மேலாண்மை ஆகியவை அடங்கும். பாதுகாப்புத்துறை அமைச்சர், தமது உரையில், அரசாங்கத்தின் ‘டிஜிட்டல் இந்தியா’ பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காக டிஏடியைப் பாராட்டினார். புதிய முயற்சிகள் துறையின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், திரு ராஜ்நாத் சிங், ஸ்பார்ஷின் வளர்ச்சி, சோதனை மற்றும் செயல்படுத்தல் ஆகிய முக்கிய துறை திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரியான முன்முயற்சியை வெளிப்படுத்தியதற்காக மூன்று அணிகளுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்.
ஸ்பார்ஷ் மொபைல் ஆப்;இந்த செயலியானது ஓய்வூதியம் பெறுவோர் அணுகலை உறுதி செய்வதுடன், அவர்களின் மொபைல்கள் மூலம் ஸ்பார்ஷ் போர்ட்டலின் முக்கிய செயல்பாடுகளை சென்றடையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1864083
***************
(Release ID: 1864166)
Visitor Counter : 242