அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் நடந்த "உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு 2022" இல் உரையாற்றினார்

Posted On: 24 SEP 2022 5:16PM by PIB Chennai

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் "உலகளாவிய தூய்மையான எரிசக்தி  நடவடிக்கை அமைப்பு -2022" இல், மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்ட இந்திய குழுவுக்கு  தலைமை ஏற்றுள்ள மத்திய அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். போக்குவரத்துத் துறையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிகர பூஜ்ஜிய முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து கண்காணித்து வருகிறார் என்றார் அவர் .

பிட்ஸ்பர்க்கில் "சுத்தமான ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான சர்வதேச ஒத்துழைப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற முதன்மை நிலை உச்சி மாநாட்டில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்ற 30 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தி அமைச்சர்களிடையே உரையாற்றிய அவர், நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது என்று தெரிவித்தார்.

 

காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும், 2005 ஆம் ஆண்டை விட 2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 33-35% குறைக்கும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். சிஓபி26 இல் இந்தியாவின் பிரகடனத்தில், பிரதமர் மோடி வெளிப்படுத்திய லட்சிய மாற்ற இலக்குகள் மத்தியில் புதுப்பிக்கத்தக்க திறன் சேர்க்கையின் வேகமான வேகத்தை அடைவதன் மூலம் தூய்மையான ஆற்றலை நோக்கிய அதன் மாற்றத்தில் இந்தியா உறுதியாக உள்ளது என அமைச்சர் கூறினார்.

2014ல் 32 ஜிகாவாட்டாக இருந்த நாட்டின் ஒட்டுமொத்த நிறுவு திறனை 5 மடங்கு அதிகரித்து 2022க்குள் 175 ஜிகாவாட்டாகவும், மேலும் 500 ஆகவும் உயர்த்தும் வகையில், உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861944

*****

 (Release ID: 1861979) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Hindi , Marathi