குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சப்கா சாத், சப்கா விகாஸ் தத்துவம் காந்திய சிந்தனையிலிருந்து உதித்தது: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 24 SEP 2022 3:50PM by PIB Chennai

“அனைவரும் இணைவோம், அனைவருக்குமான வளர்ச்சி’’  என்ற அரசின் தொலைநோக்கு காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்டது என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்  அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் காந்திய கொள்கைகள் ஊடுருவுகின்றன என்பதை வலியுறுத்திய அவர், பாபுவின் போதனைகள் மனிதகுலத்திற்கு என்றென்றும் பொருத்தமானதாக இருக்கும் என்றார்.

புது தில்லியில் இன்று ஹரிஜன சேவா சங்கத்தின் 90வது நிறுவன தினத்தைக் குறிக்கும் 'சத்பவனா சம்மேளனத்தில்' திரு ஜக்தீப் தன்கர் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் ஆச்சார்யா வினோபா பாவே ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காந்திஜி ஹரிஜன சேவா சங்கத்தை உருவாக்கியதன் பின்னணியை நினைவுகூர்ந்த குடியரசு துணைத் தலைவர், நமது சுதந்திரப் போராட்டம் ஒரு அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக-கலாச்சார மறுமலர்ச்சியும் என்றார். "இது சமூக ஒற்றுமை மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கான அழைப்பு" என்று அவர் கூறினார்.

மகாத்மா காந்தி இந்திய கலாச்சாரத்தின் சிறந்த கூறுகளான உண்மை மற்றும் அகிம்சையை – களத்தில்  செயல்படுத்த முயற்சித்தார் என்று அவர் கூறினார்.

“மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மனிதகுலம் பெரிதும் பயனடையும். இன்று உலகம் எதிர்கொள்ளும் பல ஆபத்துகள் - வறுமை முதல் பருவநிலை மாற்றம், போர்கள் வரை - காந்தியடிகளின் எண்ணங்கள் அனைத்திற்கும் தீர்வை வழங்குகின்றன” என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

"சமீப ஆண்டுகளில் காந்திய தத்துவத்துடன் ஒருமித்த கருத்துடன், அனைவரின், குறிப்பாக ஒதுக்கப்பட்டவர்களின் திறன் மற்றும் திறமைகளை முழுமையாக சுரண்டுவதை உறுதி செய்யும் சூழல் அமைப்பு உருவாகி வருவதைக் குறிப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ஸ்ரீ தன்கர் கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர், அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய கடைசி உரையில், “சமூக ஜனநாயகத்தின் அடித்தளத்தில் அரசியல் ஜனநாயகம் நீடிக்காது” என்று குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின் இலட்சியங்களை கடைப்பிடித்ததற்காக ஹரிஜன சேவக் சங்கத்தைப் பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அதன் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஹரிஜன சேவக் சங்கத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சங்கர் குமார் சன்யால், ரிஷிகேஷ் பரமார்த் நிகேதன் தலைவர் சுவாமி சிதானந்த சரஸ்வதி, முன்னாள் எம்.பி.யும், ஹரிஜன சேவக் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு நரேஷ் யாதவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக்காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861926

***************



(Release ID: 1861941) Visitor Counter : 191


Read this release in: Marathi , Urdu , English , Hindi