நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மஞ்ஜிரி கானில் உள்ள வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சிக் கழகத்திற்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் பயணம் செய்தார்

Posted On: 18 SEP 2022 3:08PM by PIB Chennai

மஞ்ஜிரி கானில் உள்ள வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சிக் கழகத்திற்கு (விஎஸ்ஐ) உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் திரு சுதான்ஷு  பாண்டே பயணம் செய்தார்.

இந்தப் பயணத்தின் போது, இந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கரும்பு தொழிற்சாலைக்கான பல்வேறு பொருட்களையும் உப பொருட்களையும் உருவாக்கும்   பணிகளை அவர் ஆய்வு செய்தார்.  தொழில்நுட்ப ஆதரவு மூலம் சர்க்கரை தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு இந்த நிறுவனத்தின்  பங்களிப்பையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும்   அவர் பாராட்டினார்.

ஆண்டொன்றுக்கு 137 லட்சம் டன்னுக்கும் அதிகமான சர்க்கரை உற்பத்தி மற்றும் 225 கோடி லிட்டர் எதனால் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிராவை மாற்றுவதில் வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.

மகாராஷ்டிரா அரசின் சர்க்கரைத்  துறை ஆணையர் திரு சேகர் கெய்க்வாட்,  விஎஸ்ஐ தலைமை இயக்குனரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு சிவாஜிராவ் தேஷ் முக் உள்ளிட்டோர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860382

*******



(Release ID: 1860396) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Hindi , Marathi