அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்- இன் பிரபல அறிவியல் இதழான ‘விஞ்ஞான பிரகதி’ ‘ராஜ்பாஷா கீர்த்தி விருது’ பெற்றது
Posted On:
17 SEP 2022 11:10AM by PIB Chennai
சிஎஸ்ஐஆர்-இன் பிரபல அறிவியல் இதழான "விஞ்ஞான பிரகதி" புதிய வரலாற்றை படைத்துள்ளது. இந்த இதழ் தேசிய ராஜ்பாஷா கீர்த்தி விருதை (முதல் நிலை) பெற்றுள்ளது சூரத்தில் உள்ள பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டாவது அகில இந்திய ராஜ்பாஷா சம்மேளன கூட்டத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவல் மொழி துறை ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 9000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
சிஎஸ்ஐஆர்-ன் தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா முன்னிலையில் இந்த பெருமைமிக்க ராஜ்பாஷா கீர்த்தி விருதை பெற்றார்
குஜராத் மாநில முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் மற்றும் ல அமைச்சர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விஞ்ஞான பிரகதி இதழின் உள்ளடக்கங்கள் இளைஞர்களிடையே அறிவியல் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியாவின் சிறந்த பிரபலமான அறிவியல் இதழ்களில் ஒன்றான இது, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) இந்த இதழை 1952 இல் வெளியிடத் தொடங்கியது. இது ஏழு தசாப்தங்களின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1860013
******
(Release ID: 1860064)
Visitor Counter : 209