பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 செப்டம்பர் 19 முதல் 20 வரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

Posted On: 17 SEP 2022 9:22AM by PIB Chennai

2022 செப்டம்பர் 19 முதல் 20 வரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின்பாதுகாப்பு  மற்றும்  பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித்துறை அமைச்சர் ஜெனரல் முகமது சாக்கியுடன் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை  நடத்துவார்.  இருதரப்பு பாதுகாப்பு உறவுகள்,  ராணுவங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய முன்முயற்சிகளைக்  கண்டறிதல்,  இரு நாடுகளின் பாதுகாப்புத்  தொழில்துறைகளுக்கிடையே ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி இரு அமைச்சர்களும் ஆய்வு செய்வார்கள். இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் கூடுதல்  முக்கியத்துவம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்படும்.

 

எகிப்து அதிபர் திரு அப்தெல் ஃபத்தா அல்-சிசியையும் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பார்.  திரு ராஜ்நாத் சிங்கின் பயணம், இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது சிறப்பு நட்புறவை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். 

 

*******


(Release ID: 1860019)
Read this release in: Telugu , English , Urdu , Hindi