அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் நிதி அளிக்கப்பட்ட திட்டங்கள், கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி உதவி ஆகியவற்றின் தீவிர அமலாக்கத்தை உறுதி செய்வதை நாடு முழுவதும் கண்காணிப்பதற்கும் பின்னூட்டம் அளிப்பதற்குமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தகவல் பலகையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்

Posted On: 15 SEP 2022 5:24PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால் நிதி அளிக்கப்பட்ட திட்டங்கள், கல்வி உதவித்தொகை, ஆராய்ச்சி உதவி ஆகியவற்றின் தீவிர அமலாக்கத்தை உறுதி செய்வதை நாடு முழுவதும் கண்காணிப்பதற்கும் பின்னூட்டம் அளிப்பதற்குமான  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தகவல் பலகையை மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார்.

இந்த தகவல் பலகையின் மூலம், ஒவ்வொரு திட்டங்கள் மற்றும்  அனைத்து மாநில எந்த குழுவினருக்குமான நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை நிகழ்நேர அடிப்படையில் மதிப்பீடு செய்யவும், தேவைபட்டால் குறை நீக்கும் நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளவும், முடியும் என்று அமைச்சர் கூறினார். எஸ்சி / எஸ்டி / ஓபிசிக்கள் மற்றும் பொது சாதிகளுக்கு வயது வாரியாகவும், பாலினம் வாரியாகவும் திட்டங்கள் மற்றும் கல்வி உதவி தொகையின் ஆய்வுத் தாக்கம் குறித்து ஆலோசனை கூறவும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தகவல் பலகையில் பதிவிடப்படும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த தகவல் பலகை நல்ல தொடக்கம் என்றும், எதிர்காலத்தில் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு பொதுவான தகவல் பலகை உருவாக்குவதற்கான முயற்சிகள் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,768 முகமைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையால்  ரூ.20,000 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் நிகழ்நேர தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலசெய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859604

*****

 



(Release ID: 1859671) Visitor Counter : 176


Read this release in: English , Urdu , Hindi , Odia , Kannada