வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த ஆண்டைவிட (இந்தாண்டு) ஏப்ரல்- ஆகஸ்ட் 2022-ல் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவை) 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2022 4:45PM by PIB Chennai

கடந்த ஆண்டைவிட (இந்தாண்டு) ஏப்ரல்- ஆகஸ்ட் 2022-ல் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவை) 19.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோலியம், கற்கள், நகை அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட, இந்தாண்டு (2022) ஏப்ரல்- ஆகஸ்ட் மாதங்களில் 8.5 சதவீதம் அதிகரித்து 135.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட, இந்தாண்டு (2022) ஆகஸ்ட் மாதத்தில் பொருட்களின் ஏற்றுமதி 1.6 சதவீதம் அதிகரித்து 33.9 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு (2022) ஆகஸ்ட் மாதத்தில் புகையிலை (76.4%), எண்ணெய் உணவுப் பொருட்கள் (73.7%),மின்சாதனபொருட்கள் (50.8%) மற்றும் அரிசி (43.6.%) ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டை விட, இந்தாண்டு (2022) ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவை) 6.75% அதிகரித்து 57.47 பில்லியன் டாலர் அளவிற்கு இருந்தது.  கடந்த ஆண்டை விட இந்தாண்டு (2022) ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டு மொத்த இறக்குமதி 33.15 சதவீதம் அதிகரித்து 75.84 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859234

*******


(வெளியீட்டு அடையாள எண்: 1859288) வருகையாளர் எண்ணிக்கை : 272
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri