எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பம் அல்லாத பிரிவுக்கான ஆறாம் நிலை ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள்

प्रविष्टि तिथि: 08 SEP 2022 4:38PM by PIB Chennai

தொழில்நுட்பம் அல்லாத வகையைச் சேர்ந்த ஆறாம் நிலை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் கமர்ஷியல் அப்ரண்டிஸ் பணிகளுக்கு 7,124 பணியிடங்களுக்காக கடந்த ஜூலை 30, 2022 அன்று கணினி அடிப்படையிலான கொள்குறி வகைத் தேர்வை இந்திய ரயில்வே நடத்தியது. அனைத்து 21 ரயில்வே பணியாளர் வாரியங்களின் ஆறாம் நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மண்டலத்திற்கு 601 ஸ்டேஷன் மாஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே போல் அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், கோரக்பூர், குவஹாத்தி, ஜம்மு, கொல்கத்தா, மால்டா, மும்பை, முசாஃபர்பூர், பாட்னா, ராஞ்சி, செகந்திராபாத், சிலிகுரி மற்றும் திருவனந்தபுரம், மண்டலங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணியாளர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857811

-----


(रिलीज़ आईडी: 1857826) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi