பாதுகாப்பு அமைச்சகம்
விசாகப்பட்டினத்தில் முப்படை வீரர்களின் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி
Posted On:
06 SEP 2022 4:25PM by PIB Chennai
முப்படை வீரர்களுக்கான 70-ஆவது கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா செப்டம்பர் -5, 2022 விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. கிழக்கு கப்பல்படை தலைமையின் கீழ் முதன் முறையாக நடைபெற்ற முப்படை வீரர்களுக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியை தலைமையேற்ற கப்பல் படையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆர் ரவி தொடங்கி வைத்தார். கிழக்கு கடலோர ரயில்வே துறையின் மண்டல வருவாய் மேலாளரும் கிழக்கு கடலோர ரயில்வேத் துறை விளையாட்டு சங்கத்தின் தலைவருமான திரு அனுப்குமார் சத்பதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஒருமாத காலம் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள், இந்திய ராணுவம் சிவப்பு, இந்திய ராணுவம் பச்சை, இந்திய கப்பல்படை மற்றும் இந்திய விமானப்படையாகும். செப்டம்பர் -5, 2022 தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர்-2, 2022 வரை 4- நாள் டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் மற்றும் டி-20 போட்டி நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1857133
**************
(Release ID: 1857169)
Visitor Counter : 162